Top Stories

மேஷம்:  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும் பத்தில் நிம்மதி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மிதுனம்:

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். உங்களை பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கடகம்:

உணர்ச்சி வேகத் தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர் களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுக தொந்தரவு கள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்:

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உற்சாகமான நாள்.

கன்னி:

உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

துலாம்:

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக் கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாள்.

விருச்சிகம்:

சந்திராஷ்டமம் தொடங்குவதால் அடுக்கடுக் கான வேலைகளால் அவதி படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற் படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள். 

தனுசு:

உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி யடையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நன்மை கிட்டும் நாள். 

மகரம்:

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். 

கும்பம்:

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்:

எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.  வெளியூர் பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

மேஷம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபம்:

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர், அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

மிதுனம்:

குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்:

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.

சிம்மம்:

உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வ மாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

கன்னி:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

துலாம்:

சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுபிடியுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்:

பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள் வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்:

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்:

குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்:

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சி கள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். சந்தேகப் புத்தி யால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமத மாக வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

மிதுனம்:

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர் கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோ கத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

கடகம்:

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. புது வேலை அமையும். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்:

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

துலாம்:

சந்திராஷ்டமம் தொடங் குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். முன் கோபத்தால் பகை உண்டாகும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்:

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு:

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுக்காக சில உதவி செய்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

மகரம்:

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்:

எதிர்ப்புகள் அடங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்:

சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாக வும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

ரிஷபம்:

சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப் பது நல்லது. உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்:

எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள். 

கடகம்:

சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தைரி யமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  

சிம்மம்:

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள். 

கன்னி:

சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். போராட்டமான நாள். 

துலாம்:

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு:

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்:

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். நட்பு வட்டம் விரியும். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள். 

கும்பம்:

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள். 

மீனம்:

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முகப்பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலை கள் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

மேஷம்: கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொள்ள வேண்டிய நாள். கூடப்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. வீணான குழப்பங்களில்     இருந்து  விடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

 

ரிஷபம்: உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு.

மிதுனம்: யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளும் எண்ணம் உருவாகும். அன்னிய தேச அனுகூலம் உண்டு.

கடகம்: சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும் நாள். தொழில் ரீதியாக முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பகையொன்று நட்பாகும்.

சிம்மம்: வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நேற்றைய பணியொன்றை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

கன்னி: நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். தொழிலில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்: உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியங்களில் வெற்றி கிடைக்கும். 

விருச்சகம்: வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்கள் அனுகூலம் தரும்.

தனுசு: கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு அகலும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். 

மகரம்: இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாகனப் பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை கிட்டும்.

கும்பம்: ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். சகோதர வழிப் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். வீடுமாற்றம் உருவாக வாய்ப்பு உண்டு.

மீனம்: தனவரவு பெருகும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பயணம் பலன் தரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரங்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். போராடி வெல்லும் நாள். 

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணபலம் உயரும். பால்ய நண்பர் களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இனிமையான நாள்.

மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். 

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உங்களை அறியாம லேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார் கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்:  குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். 

தனுசு: திட்டமிட்ட காரியங் கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. நண்பர் கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.    

மகரம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங் களின் நட்பு கிட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். பெருந் தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள். 

கும்பம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வராது என்றிருந்த பணம் வரும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.   

மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். அக்கம்-பக்கம் இருப்பவர் களை அனுசரித்து போங்கள். உங்களை பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.  

Advertisement