Sani Peyarchi 2017 - KADAGAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் கடகம்

 Sani Peyarchi 2017 - SIMMAM  | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் சிம்மம் 

 Sani Peyarchi 2017 - MESHAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் மேஷம்

Sani Peyarchi 2017 - KUMBAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் கும்பம்

Sani Peyarchi 2017 - MAGARAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் மகரம்

Sani Peyarchi 2017 - THANUSU | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் தனுசு

 Sani Peyarchi 2017 - MITHUNAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் மிதுனம்

Sani Peyarchi 2017 - THULAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் துலாம்

 Sani Peyarchi 2017 - VIRUCHIGAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் விருச்சிகம்

Sani Peyarchi 2017 - KANNI | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் கன்னி

 Sani Peyarchi 2017 - RISHABAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் ரிஷபம் 

 Sani Peyarchi 2017 - MEENAM | சனி பெயர்ச்சி 2017 பலன்கள் மீனம்

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - மேஷம்
Guru Peyarchi 2017 - Mesham

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - ரிஷபம்

Guru Peyarchi 2017 - Rishabam

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - மிதுனம்

Guru Peyarchi 2017 - Mithunam

 

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - கடகம்

Guru Peyarchi 2017 - Kadakam

 

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - சிம்மம்

Guru Peyarchi 2017 - Simmam

 

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - கன்னி

Guru Peyarchi 2017 - Kanni

 

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - துலாம்

Guru Peyarchi 2017 - Thulam

 

 

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - விருச்சகம்

Guru Peyarchi 2017 -  Viruchikam

 

 

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - தனுசு

Guru Peyarchi 2017 - Dhanusu

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - மகரம் 

Guru Peyarchi 2017 - Magaram

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - கும்பம் 

Guru Peyarchi 2017 -Kumbam

குரு பெயர்ச்சி 2017 பலன்கள் - மீனம் 

Guru Peyarchi 2017 - Meenam

 

கோலாலம்பூர், ஏப்ரல் 13- பிறக்கும் ஏவிளம்பி சித்திரை புத்தாண்டை நாளை மலேசியா முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளுடன் இந்துகள் கொண்டாடுகின்றனர். அதேவேளையில் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் எத்தகைய பலன்கள் இருக்கும் என்பது குறித்து கோலாலம்பூர், பந்தாய் ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் தலைமை குருக்கள் மலை மேகு சிவாச்சாரியார் விளக்கம் அளித்துள்ளார்.

நாளை அதிகாலை 3.28 மணியளவில் பிறக்கும் ஏவிளம்பி வருடம், பொதுவாகவே மத்திய நிலையிலான பலன்களைத் தருகிறது. வருடம் முழுதும் 50 விழுக்காடு ஆதாயமும் 50 விழுக்காடு விரயமும் என சமசீரான ஆண்டாக ஏவிளம்பி விளக்கும் என மலை மேகு சிவாச்சாரியார் கூறியுள்ளார்.

 

மேஷம்

நட்சத்திரம் :அசுவினி,பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய

அதிஷ்ட கல் :பவளம்

அதிர்ஷ்ட வண்ணம் :சிகப்பு

அதிஷ்ட எண் :1, 3, 9

அதிஷ்ட திசை :தெற்கு

அஞ்சா நெஞ்சம் கொண்ட சொல்வன்மை மிகுந்த மேக்ஷராசி அன்பர்களே! நீங்கள் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் எனும் பழமொழிக்குகேற்ப மற்றவர் இதயத்தில் இடம் பிடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள். 

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்து வகையில் உங்கள் ராசிஅதிபதி ஸ்ரீ செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தில் (சிம்மராசி) இரு்ந்த குருவானவர் இப்பொழுது ஸ்ரீதுன்முகி ஆண்டு ஆடி 27, ஆகஸ்டு மாதம் (11-8-2016)ஆம் நாள் வியாழக்கிழமையில் உங்கள் ராசிக்கு 6-ஆம் இடமான கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசிக்கிறார். 28-7-2017 ஆம் ஆண்டு(1-வருடம்/15-நாள்கள்) வரை கன்னிராசியில் சஞ்சாரம் செய்கிறார். 

ஸ்ரீ குருபகவானின் சஞ்சாரம்:  சிம்மத்தில் இருந்து குருபகவான் தங்கள் 6-ஆம் ஸ்தானமான சத்ரு/ரோகஸ்தானத்திற்கு வருவது அவ்வளவு சிறப்பு கிடையாது. கண்னைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். உங்கள் ஜெனன ஜாதகம் வலிமையுடன் இருந்தால் கெடுபலனை சாதுர்யமாக சமாளீத்துக் கொள்ளலாம். உங்கள் ஆற்றல் மீண்டும் புத்துயிர் அடையும், எதையும் விடாபிடியாக செய்யும் மேக்ஷராசி நேயர்களே! முரட்டுத்தனத்தையும், முன்கோபத்தையும் விட்டு விட்டு சமயோஜிதமாக செயல்பட்டால் கெடுபலனை மாற்றீக் கொள்ளலாம்.புது முயற்சியில் யோசித்து செயல்படுங்கள். 5-ல் குரு இருந்து காலம் நன்மையான காலம். இப்போது 6-ஆம் இடத்து கன்னி குருவால் ஒர் பற்றீல்லாத போக்கினையே சிந்திக்க வேண்டிவரும். வீம்பாகப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். பொருத்தார் பூமி ஆள்வார் எனும் பழமொழிக்கு ஏற்ப அமைதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம். 

ஸ்ரீ குருபகவான் தான் இருக்கும் இடத்தை காட்டிலும் குரு பார்வைக்குதான் விசேக்ஷமான பலன் உண்டு. ஆகையால் குரு உங்கள் 6-ஆம் இடத்தில் இருந்து தனது 5-7-9-ஆம் பார்வையால் 10-தொழில்/12-அயன/சயன/2-தனஸ்தானத்தை பார்ப்பதால் அந்த இடங்கள் வலிமை அடைகின்றது. தொழில் சிறப்படையும், விரயத்தை கட்டுப்படுத்துவார், நல்ல உறக்கத்தை.கொடுப்பார், பணப்புழக்கம் நல்லபடி இருக்கும். எனவே தொட்டகாரியம் துளீர்விடவும், செய்தொழில் லாபம் கிடைக்கவும்,நோய் அகலவும், வாய்ப்புகள் வீடுதேடி வரவும் வியாழக்கிழமை விரதமிருந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள். 

உத்தியோகஸ்தர்கள்: வேலை நிலவரத்தில் கடும் சோதனையும், வேதனையும் இருக்கும். சகதோழர்களீடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது. விட்டுக் கொடுத்து போங்கள், ஜெயம் உங்களூக்கே. 

மாணவர்கள்: இது ஒரு சோதனையான காலம், படிப்பில் கவனம் தேவை. முயற்சி திருவினையாக்கும் எனவே சந்தோக்ஷமாக படியுங்கள் ஜெயம் உங்கள் பக்கம் தான். 

வியாபாரிகள்: பணத்தை அதிகமாக முடக்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் தெரிந்து செயல்படுங்கள். வேலை அதிகமானலும் சோர்வு காட்டாமல் செய்து முடிப்பது லாபத்தை கொண்டுவந்து சேர்க்கும். 

தொழிலாளர்கள்: வேலைக்கு தகுந்த ஊதியமும், படும்பாட்டிற்குகேற்ப பலனும் கிட்டும். திட்டமிட்டு ஒரு செயலை செய்தால் அதன்மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. விடாமுயற்சி விஸ்வரூப பலன். 

பெண்கள்: இந்த குரு பெயர்ச்சி உங்கள் கையிருப்பை கரைய செய்யும். எனவே செலவை கட்டுப்பாட்டில் வைத்து குடும்ப நிர்வாகத்தை திறம்படச் செய்யுங்கள். 

பரிகாரம்: பழனி மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை உங்கள் நட்சத்திர நாளீல் போய் தரிசியுங்கள், அங்குள்ள குரு மகானை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டு ஏழ்மையில் உள்ள மாணவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள், குருவருள் வீடு தேடி வரும்.

ரிஷபம்

நட்சத்திரம் :கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம்

அதிஷ்ட கல் :வைரம்

அதிர்ஷ்ட வண்ணம் :வெள்ளை

அதிஷ்ட எண் :1, 4, 8

அதிர்ஷ்ட திசை :கிழக்கு

இனிமையாக பேசி சமூகத்தில் அந்தஸ்துமிக்கவராகவும், செல்வ செழிப்புடன் எடுத்து காரியத்தை முடித்தே தீரும் ரிக்ஷபராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் உங்கள் ராசிக்கு அதிபதி ஸ்ரீ சுக்கிரபகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் இடத்தில்(சிம்மம்) இருந்த குருவானவர் ஸ்ரீ துன்முகி ஆண்டு ஆடி மாதம் 27 ஆம் தேதி, ஆகஸ்டு(11-8-2016) மாதம் வியாழக்கிழமை கன்னிராசிக்கு உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசிக்கிறார். இது ஒரு சிறப்பான அம்சம் ஆகும். 28-7-2017 வரை (1-வருடம்/15-நாட்கள்) வரை கன்னி ராசியில் இவரின் சஞ்சாரம் இருக்கும்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரம்: மன்னவன், பென்னவன் என கூறப்படும் ஸ்ரீகுரு பகவான் அனைத்து கிரகங்களீல் முதன்மையான சுபகிரகம். குரு 5-ல் வந்தால் அற்புதமான யோகபலனைத் தருவார். 5-ஆம் இடம் என்பது எப்பேர்பட்ட இடம் தெரியுமா? அற்புதமான இடம் 5-யை, 9-யை மிஞ்சும் பலன் தருபவை வேருண்டோ! நீங்கள் அதிர்க்ஷ்ட வாசலில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். வாழ்க்கையில் முன்னேபோக முடியாமல். பின் செல்லவும் முடியாமல் சிக்கிக் கொண்டிருந்த நீங்கள் சமயசஞ்சிவி போல 5-ஆம் இடத்து குருவால் வாழ்வில் உன்னதநிலைக்கு வரப்போகிறீர்கள். 5-ஆம் இடத்து குரு நன்மை என்றாலும் ஜெனன ஜாதகமும் வலிமை அடைந்தால் இந்த வருடம் முழுமையும் சிறந்த பலன் கிடைக்கும். ஸ்ரீ குரு பகவான் தான் இருக்கும் இடத்தைவிட பார்வைக்குதான் பலம் அதிகம் எனவே குரு தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 9-பாக்கிய, 11-லாபம், 1-லக்ன பாவத்தை பார்ப்பதால் கவலைகள் விலகி அனைத்து சுகத்தையும் அடைவீர்கள். உடல் நலம் அடையும், தந்தை மீது பாசம் பிறக்கும், செய்தொழில் லாபம் ஏற்படும் பூர்வீக சொத்துக்கள் உங்களூக்கு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்: உங்கள் புத்தி, யுக்தி திறமை இவற்றால் எதையும் சமாளீத்து மேலிடத்தில் பாராட்டுதல்கள் அடைவீர்கள்.

மாணவர்கள்: படிப்பில் முன்னேற்றம் அடையும் காலம். புத்திசாலித்தனம் பிரகாசிக்கும், காற்றூ உள்ள போதே தூற்றீக் கொள் எனும் பழமொழிக்கு ஏற்ப படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.

வியாபாரிகள்: நல்ல அபிவிருத்தியுடன் பிரமாதமான லாபம் வரும். வருமானம் அதிகரிக்கும். கடன் வசூலாகும். காலம் பொன் போன்றது எனும் பழமொழிக்கு ஏற்ப இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளூங்கள்.

தொழிலாளர்கள்: உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். திறமையை பயன்படுத்தி பாராட்டு அடைவீர்கள். வாழ்க்கையில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும்.

பெண்கள்: உள்ளத்தில் புது தெம்பு பிறக்கும், முகத்திலே புதுதேஜஸ் காணப்படும். சொல்லப்போனால் மகாலட்சுமி மாதிரி ஜொலிப்பீர்கள்.

மிதுனம் 

நட்சத்திரம் :மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, 

அதிஷ்ட கல் :மரகதம்

அதிர்ஷ்ட வண்ணம் :பச்சை

அதிஷ்ட எண் :5, 6, 8

அதிஷ்ட திசை :வடகிழக்கு  

 நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து புத்திசாலியுடன் பழகுவதோடு மட்டுமல்ல மற்றவர்கள் மனதிலும் நம்பிக்கையை வளர்க்கும் கனிவான பேச்சால் காரியம் சாதிக்கும் மிதுனராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் கல்விகாரகன், வித்யாகாரகன் என அழைக்கப்படும் ஸ்ரீபுதபகவான் ஆட்சி கிரகமாக கொண்ட மிதுனராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு இதுவரை 3-ஆம் வீட்டில்(சிம்மம்) இருந்த குரு பகவான் ஸ்ரீ துர்முகி ஆண்டு ஆடி மாதம் 27-ஆம் தேதி (11-8-2016)-ல் ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை சிம்மத்தில் இருந்து இடம் பெயர்ந்து கன்னிராசிக்கு செல்கிறார். இந்த சுகஸ்தானம், 4-ஆம் இடமான கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசித்து சஞ்சரிப்பது மிகச் சிறப்புதான். தேவகுரு ஸ்ரீ குருபகவான் 28-7-2017 வரை (1-வருடம்/15-நாள்கள்) அங்கு இவர் சஞ்சாரம் செய்கிறார்.

ஸ்ரீகுரு பகவான் சஞ்சாரம்:    4-ஆம் இடம், சுகஸ்தானம்-கேந்திரஸ்தானம் இங்கு குருபகவான் வருவது ஒரு வகையில் நன்மைதான். இதுவரை 3-ஆம் இடத்தில் இருந்த குரு இப்போது 4-ஆம் இடம் என்னும் சுகஸ்தானத்தில் கன்னிராசிக்கு வந்து இருக்கிறார். 4-ஆம் இடத்தில் நன்மையை தரமுடியாது இருந்தாலும் 3-ஆம் இடத்துக்கு இது பரவாயில்லை. உங்கள் ஜெனன ஜாதகம் நல்லநிலையில் இருந்தால் நல்லபலன்களே நடக்கும். மன்னவன் 4-ல் நின்றால் மலைபோல் துயர்வந்தாலும் கண் எதிரில் பனியாய் விலகும், நோய்கள் தீரும், உடல்நலம் தேரும், வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள், கடன்சுமை கழியும்.

ஸ்ரீகுருபகவான் தான் இருக்கும் இடத்தை காட்டிலும் தன் பார்வைக்கு தான் விசேஷ சக்தி உண்டு. எனவே தான் உங்கள் 8-ஆம் இடமான ஆயுள் ஸ்தானம், 10-ஆம் இடமான தொழில் ஸ்தானம், 12-ஆம் இடமான அயன/சயன ஸ்தானத்தை தனது 5-7-9-ஆம் பார்வையால் பார்க்கிறார். இதனால் ஆயுள்பலம் அடையும், தொழில்சிறப்படையும், நல்ல தூக்கம் வரும், விரயம் மட்டுப்படும். குருதான் பார்க்கும் இடத்தை வளமாக்குவார் என்பதற்கு ஏற்ப உங்கள் ஆரோக்கியம் சீராகும், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த இடத்திற்கு செல்வீர்கள், பயணத்தால் பலன் கிடைக்கும், அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலச் செய்தி வரும். எதையாவது ஒரு மாற்றத்தை கொடுப்பார். இக்காலத்தில் எதையும் ஒரு தடவைக்கு பல தடவை சிந்தித்து செயல்படுங்கள். குருவழிபாடு குதூகலம் தரும்.

உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் உங்கள் நிலைமையில் மாற்றம் உண்டு எதையும் அடக்கி வாசிப்பது நல்லது, இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் சிந்தித்து செயல்படுங்கள். 

மாணவர்கள்: கல்வியில் மந்தநிலை, உயர் படிப்பு, மேல்படிப்பு பாதிக்கும் சந்தர்ப்பம் உருவாகும் எனவே முன்னேச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

வியாபாரிகள்: ஏற்றம், இறக்கம் இரண்டும் இருக்காது, அமைதியாக, நிதானத்துடன் இருந்து காரியத்தில் ஜெயம் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தொழிலாளர்கள்: முன்னேற்றத்திற்கான தடைகள் அலைச்சல் விலகி பாடுபடும் அளவிற்கு ஊதியம் கிட்டிடும். ஊக்கம் இருந்தால் ஆக்கம் உண்டு.

பெண்கள்: கடுமையான குடும்பச்சுமை ஓய்ந்தாலும், அமைதியுடன் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி குடும்பத்தில் சிறப்படையுங்கள்.

பரிகாரம்: காஞ்சிபுரம்-உத்திரமேருக்கு அருகில் உள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். கல்வி அமைப்பை புதுப்பிக்க உதவுங்கள் உங்கள் வாழ்வில் நிம்மதி கிட்டும்.

கடகம்

நட்சத்திரம் :புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

அதிஷ்ட கல் :முத்து

அதிஷ்ட வண்ணம் :இளஞ்சிவப்பு

அதிஷ்ட எண் :1, 3, 9

அதிஷ்ட திசை :தென்கிழக்கு

சமூகத்தின் மீது கவனிப்பு,  தங்கள் பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியத்தையும் சுமூகமாக முடிக்கும் நீங்கள் கர்மமே கண்ணாக கருதி சமயோசிதமாகவும், சாதுரியமாகவும் செயல்படும் கடகராசி அன்பர்களே!

திருகணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திர பகவானை ஆட்சிகிரக வீடாக கொண்ட கடகராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான சிம்மத்தில் இருந்த குருபகவான் இப்போது 3-ஆம் இடமான தைரிய, வீரிய, சகோதர ஸ்தானத்திற்கு வருகிறார். ஸ்ரீ துர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் (11-8-2016) மாதம் வியாழக்கிழமை கன்னிராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த 3-ஆம் இடமான கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிப்பது சிறப்பானது. குருவானவர் 1-வருடம்/15-நாள்கள் வரை கன்னிராசியில் தான் இருப்பார். அதாவது 28-7-2017 வரை இங்கு இருக்கிறார்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரம்: 3-ஆம் இட கன்னி குரு முன்னேற்றம் மிக வழங்குவார். உங்கள் ராசிக்கு குரு 3-ஆம் இடத்தில் பிரவேசிக்கிறார் இது உகந்த இடம் கிடையாது, இருந்தாலும் நவக்கிரகத்தில் குருவானவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர் எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். சந்திரன் – குரு பகை என்றாலும் உங்கள் ராசியில் தான் குருவானவர் உச்சம் அடைகிறார். ஆதலால் உங்கள் ராசியை பாதிப்படைய செய்ய மாட்டார். இருந்தாலும் தைரியமாக செயல்பட முடியாமை, சகோதர வழி பிரச்சனை, கடன்பட்டு சமாளிப்பது, இடமாற்றம், பதிவுகள் காணாமல் போவது போன்ற சில இடர்கள் ஏற்படும். பொதுவாக தோல்வி என்பது கடகராசிக்கு இல்லாத ஒன்னுதான், சந்தர்ப்பம் வரும் வரை காத்திருங்கள் வந்ததும் செயல்படுத்துங்கள். ஸ்ரீகுரு பகவான் தான் இருக்கும் இடத்தைவிட தன் பார்வைக்குத்தான் அதிக பலன் இருக்கும். கடகராசி அன்பர்களே! குரு தன் 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 7-9-11-ஆம் இடமான களஸ்திரம், பாக்கிய, லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தனபாக்கியத்தையும், செய்தொழில் லாபத்தையும், கணவன்/மனைவி மூலம் நன்மையையும் பெறப்போகிறீர்கள். உங்கள் ஜெனன ஜாதகம் இன்னும் நல்லபடி இருந்தால் இந்த ஆண்டு குருபெயர்ச்சி பலன் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள்: வேலை சுமை அதிகரிக்கும், அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாலும் பிரச்சனையை சமாளித்து சரிகட்டிவிடுவீர்கள்.

மாணவர்கள்: படிப்பில் கவனம் அவசியம் வேண்டும். மதிப்பெண் நீங்கள் எதிர்பார்த்தது போல வேண்டும் என்றால் விடாமுயற்சியுடன் படித்தால் தான் பலன் கிடைக்கும்.

வியாபாரிகள்: தொழிலில் கூட்டுச் சேரும் முயற்சி வேண்டாம். சுய உழைப்பில் சக்கைப் போடு போட்டு சம்பாதிக்கலாம்.

தொழிலாளர்கள்: பாடுபடுவதில் சிரமம் இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு தகுந்த அனுகூலமும், சலுகையும் கிடைக்கும்.

பெண்கள்: கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பதேவையை சரளமாகவும், தாராளமாகவும் செய்வீர்கள். சேமிப்பில் கவனம் தேவை இல்லையேல் பணவிரயம் ஏற்படும்.

பரிகாரம்: திருச்சிக்கு அருகே இருக்கும் திருவெறும்பூரில் அருளும் ஸ்ரீ எறும்பீஸ்-வரரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமை தரிசியுங்கள். மனோனலம், ஆரோக்கியம் பாதித்தவர்க்கு உதவுங்கள், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். 

சிம்மம் 

நட்சத்திரம் :மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய

அதிஷ்ட கல் :மாணிக்கம் (Ruby)

அதிர்ஷ்ட வண்ணம் :வெள்ளை

அதிர்ஷ்ட எண் :1, 3, 5

அதிர்ஷ்ட திசை :கிழக்கு    

எந்த ஒரு காரியத்தையும் தீர்க்கமாக சிந்தித்து செயல்படுத்தும் ஆற்றல் படைத்த சிம்மராசி அன்பர்களே! தனிக்காட்டு ராஜாவாக இருக்க விருப்பம் கொண்டவர்கள், தலைமை தாங்குவது உங்கள் தனித்தன்மை, சுயநலமும் இருக்கும் இது சிங்கத்தின் இயல்புதானே.

திருகணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் ராஜகிரகமான சூரியனை ஆட்சி வீடாக கொண்ட சிம்மராசி நேயர்களே! ஸ்ரீ துர்முகி ஆண்டு ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆங்கில மாதம் ஆகஸ்ட் (11-8-2016) வியாழக்கிழமை குருவானவர் உங்கள் சிம்மராசியில் இருந்து கன்னிராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ஜென்மராசியில் இருந்து இடம் பெயர்வது மிக சிறப்பு. 2-ஆம் ஸ்தானமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் கன்னிராசியில் உத்திர நட்சத்திரத்தில் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்கிறார். இது மிக சிறந்த அமைப்பு ஆகும். தேவகுரு 28-7-2017 ஆம் ஆண்டு (1-வருடம்/15-நாள்கள்) வரை கன்னிராசியில் இருப்பார்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரம்: 

2-ல் குரு நிற்க தனவரவு பெருகும், பேரும், புகழும், வளமான வாழ்க்கையும் அமையும், உங்கள் காலம் பொற்காலம் தான். இவ்வளவு நாள் ஜென்மராசியில் இருந்து கொண்டு முன்னேயும் போகவிடாமல், பின்னேயும் வரமுடியாமல் தட்டுத்தடுமாற வைத்துக் கொண்டிருந்த குருபகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருப்பது விசேஷம். இந்த கன்னி குருவால் வாழ்வில் எதிர்பாராத அற்புதமான வாய்ப்புகள், ஒன்றன் பின் ஒன்றாக வந்து பல செயலை செய்ய வைத்து எல்லோரும் பாராட்டி, பெருமைப்படுத்தும் வகையில் முதன்மை ஸ்தானத்தை ஏற்படுத்தியே தீர்வார். சகலவிதமான சந்தோஷங்கள் கைக்கூடி உங்கள் வாழ்க்கைக்கு புதிய விடியலை உருவாக்கிக் கொடுக்கும். இந்த பொன்னான காலத்தை நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.

குருதான் இருக்கும் இடத்தில் இருந்து கொடுக்கும் பலனைவிட குருவின் பார்வைக்குத்தான் விசேஷம் அதிகம். குரு தன் 5-7-9-ஆம் பார்வையால் 6-8-10-ஆம் இடமான சத்ரு,ரோக/ஆயுள்/தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சத்ரு பயம் போக்கவும், நோய் ஏற்படாமல் காக்கவும், நோய் ஏற்பட்டால் அதில் இருந்து விடுபடவும், தொழில் நல்லபடி நடக்கவும் தனது பார்வையால் உதவி செய்வார். உங்கள் ஜெனன ஜாதகம் நல்லபடி இருந்தால் இந்த ஆண்டு ஜெயம் உங்கள் பக்கம் தான். பிறகு என்ன உங்கள் வாழ்க்கையில் அற்புதம் நிகழ்ந்தே ஆக வேண்டும் தானே.

உத்தியோகஸ்தர்கள்: செல்வ செல்வாக்கு உயரும். ஊசலாடிக் கொண்டிருந்த சிலரது வேலையில் நிரந்தரமும், பிடிப்பும் ஏற்படும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள்: கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இத்தனை நாள் இருந்த தடைகள் விலகி படிப்பில் ஆர்வம் உண்டாகும். தேர்வில் ஜெயம் உண்டு. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டாகும், நீங்கள் கோபுரத்தில் உள்ள கலசம் போல் ஜொலிப்பீர்கள்.

வியாபாரிகள்:

நல்ல அபிவிருத்தியுடன் லாபகரமான வருமானப் பெருக்கம் ஏற்படும். பிறர் அசந்திடும் வகையில் பல காரியங்கள் செய்வீர்கள்.

தொழிலாளர்கள்: உங்களது திறமை, ஆற்றல் தெரியும் வகையில் சந்தர்ப்பம் கூடி வரும். உழைப்பில் உயர்வு அடைவீர்கள். சுயமுயற்சி நன்மையை தேடிக் கொடுக்கும். விடாமுயற்சி செய்து வாழ்வில் சிறப்பான இடத்தை அடையுங்கள்.

பெண்கள்: அசாத்திய துணிவு பிறக்கும் எடுத்து எந்த காரியத்தையும் முடிக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். முகத்திலே தேஜஸ் கூடும்.

பரிகாரம்: 

திருவையாறு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும். ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிட வேலை செய்பவருக்கு உதவி செய்யுங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும். 

கன்னி

நட்சத்திரம் :உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய

அதிஷ்ட கல் :மரகதம்

அதிர்ஷ்ட வண்ணம் :சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண் :2, 6, 8

அதிஷ்ட திசை :தெற்கு - வடக்கு    

சிறந்த சிந்தனைவாதி, அனுபவம் வாய்ந்த நீங்கள் எதைச் செய்தாலும் பணம் இருந்தால் தான் மதிப்பு, மரியாதை என்பதை புரிந்து கொண்ட கன்னிராசி அன்பர்களே! 

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் வித்யாகாரகன், கல்விக்கு அதிபதியுமான புதன்-னை அதிபதியாக கொண்ட கன்னிராசி நேயர்களே! ஸ்ரீ துர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மராசியில் இருந்து (12-ஆம் ஸ்தானம்) குருவானவர் கன்னிராசிக்கு ஜென்மத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்க உள்ளார். இவர் 1-வருடம்/15-நாள்கள் அதாவது 28-7-/2017 வரை உங்கள் ராசியில் இருப்பார்.

ஸ்ரீ குருபகவானின் சஞ்சாரம்: ஜென்ம குருவால் வாழ்வில் எந்த கெடுதல்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் நற்பலனும் ஏற்படாது. இதுவரை 12-ஆம் ஸ்தானம் எனும் விரயத்தில் சஞ்சரித்த குரு பகவான் கொடுத்த அலைச்சலுக்கு இந்த 1—ஆம் இடம் மேல்தானே ஜென்மத்தில் குரு வரும் காலம் சிக்கல் ஏற்பட்டு விலகும். இவரால் நன்மையும் ஏற்படாது, தீமையும் ஏற்படாது. பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு நன்மையை கொடுப்பார். ஜெனன ஜாதகப்படி உங்கள் ஜாதகம் அடிப்படையில் நல்லபடியாக இருந்தால் இந்த ஒரு வருடம் இந்த குரு பெயர்ச்சி நல்லபடிதான் இருக்கும். பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. இதுவரை நீங்கள் பட்டுக் கொண்டிருந்த பாட்டிற்கு இனிமேல் இது பரவாயில்லை. குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொடுக்கும் பலனைவிட பார்வைக்குதான் விசேஷ பலன் உண்டு. கன்னிராசியில் இருந்து குருவானவர் தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 5-7-9-ஆம் ஸ்தானத்தை பார்க்கிறார். 5-பூர்வ புண்ணியம் 7-களஸ்திரம் 9-பாக்கியம் என மிக முக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் உங்கள் பலம் கூடும். தீர்த்த யாத்திரை செல்ல விரும்புபவர்கள் இந்த சமயம் சரியானது. தனது பார்வை பலத்தால் உங்கள் அனைத்து கவலையையும் போக்கிவிடுகிறார். எனவே 1-ஆம் இடத்து குரு என பயம் தேவையில்லை. உங்கள் பலம் கொண்டு குரு துணையுடன் ஜெயம் பெறப் போகிறீர்கள். ஜெயம் உங்கள் இடம் தான் உள்ளது. 

உத்தியோகஸ்தர்கள்: வேலைச்சுமை கடுமையாக இருக்கும். நீங்கள் பல பிரச்சனையை படிப்படியாக தீர்ப்பீர்கள். புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் செயலில் நன்மை கிடைக்கும்.

மாணவர்கள்: இதுவே அருமையான சந்தர்ப்பம் என்பதால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே இதனை நல்லபடியாக பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும்.

வியாபாரிகள்: பண சம்பந்தமாக இருந்த கடுமை விலகிவிடும். புதிய முயற்சியில் இறங்குவதோ, அகலக்கால் வைப்பதை மட்டும் தவிர்க்கவும். நீங்கள் செய்யும் செயலை மட்டும் செய்யுங்கள் வீண் விரயத்தை தவிர்க்கலாம்.

தொழிலாளர்கள்: உங்கள் உழைப்பு எப்போதும் பக்கபலமாக இருக்கும். நீங்கள் கடுமையாக உழைத்தால் முன்னேற்றம் நிச்சயம், நீங்கள் வாழ்க்கையில் ஜெயிப்பது நிஜம். 

பெண்கள்: மனதில் அவ்வப்போது அலைபாயும் எண்ணத்தை தடுத்து  ஒருநிலைப்படுத்தினால் மனதில் மலர்ச்சியும் உள்ளத்தில் குழுமையும், குடும்பத்தில் சுபீட்சமும் அதிகரித்திடும். 

பரிகாரம்: திருச்சி அருகில்  உள்ள உத்தமர் கோவில் என அழைக்கப்படும் சப்த குருஸ்தலமான பிச்சாண்டார் கோவிலில் இருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள் முயற்சிகள் பலிக்கும்.. உங்களால் இயன்ற உதவியை அடுத்தவருக்கு செய்யுங்கள் வாழ்க்கை ஏற்றம் அடையும்.

துலாம் 

நட்சத்திரம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய

அதிர்ஷ்ட கல்: வைரம்

அதிர்ஷ்ட நிறம்:கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1,5,8

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

இனிமையாக பேசி அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்து மனதில் நினைப்பதை சொல்லாமல் நடுநிலையுடன் செயல் செய்ய விரும்பும் பேரன்புள்ள துலாம்ராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில்  நவக்கிரகத்தில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் எனப்படும் சுக்கிரபகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாகிறார். இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது ஸ்ரீ துர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 12-ஆம் இடமான அயன/சயன ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் 1-வருடம்/15-நாள்கள் (28/7/2017) வரை அங்கு அவர் சஞ்சாரம் செய்கிறார்.

ஸ்ரீ குரு பகவான் சஞ்சாரம்: 12-ஆம் இடத்து குருவால் விரயங்கள்,குழப்பம், குதர்க்கம் மேலோங்கும். பொன்னவன் குரு தன் பார்வையால் அதிர்ஷ்ட கரமான நன்மைகள் அதிகரிக்கும். இதுவரை 11-ஆம் இடத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை கொடுத்த குருபகவான் இப்போது விரயத்தில் அடி எடுத்து வைக்கிறார் என குழப்பம் அடையாதீர்கள். இன்ப, துன்பம் கலந்துதான் வரும் போன வருடம் முழுவதும் நன்மையை கொடுத்தவர் எனவே குருவானவர் எந்த ராசிக்கும் அதிக கெடுதல் கொடுத்தது கிடையாது. குருவானவர் தான் இருக்கும் இடத்தை காட்டிலும் பார்வைக்கு தான் அதிக பலம். எனவே நீங்கள் இப்போது பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. குரு தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 4-ஆம் ஸ்தானமான சுகஸ்தானத்தையும், 6-ஆம் ஸ்தானமான ரோக/சத்ரு ஸ்தானத்தையும், 8-ஆம் ஸ்தானமான ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார், இதனால் வீடு, மனை, வண்டி, வாகனம், ஆயுள் விருத்தியும், சத்ருக்கள் நசமும், ஆயுள் பலம் கூடும். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆகவே 12-ஆம் இடம் விரயம் என்பதால் வரவு/செலவு கணக்கை சரியாக செய்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உத்தியோகஸ்தர்கள்: வேலையில் அதிருப்தி ஏற்படும், அலைக்கழிப்பும், அல்லும், ஆதாயத் தட்டுப்பாடு, கீழ்நிலை ஊழியர்களால் உங்கள் வேலை பாதிக்கும் எனவே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. 

மாணவர்கள்: கல்வியில் முழுகவனம் தேவை. புத்தி, சக்தி, யுக்தி எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு முன்னேற்றமும், சிந்தனையில் தெளிவும், உள்ளத்தில் உற்சாகமும் அதிகரிக்கும்.

வியாபாரிகள்: நல்ல நிலையில் இருக்கும். ஆனால் அனுபவம் இல்லாத வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் கால்ளை விட வேண்டாம்.

தொழிலாளர்கள்: பாடுபடுவதில் சிரம்மம் இருந்தாலும் கடின உழைப்பு நல்ல பலனைத்தரும் என்பதற்கு ஏற்ப ஏற்ற ஊதியமும், சலுகையும் கிடைக்கும். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.

பெண்கள்: கையில் இருக்கும் பணம் கரையும், வரவைவிட செலவு அதிகரிக்கும். இதை தவிர்க்க கவனம் தேவை. குடும்பத்தேவையை பார்த்து செய்யுங்கள், வாழ்வில் சிறப்பு அடைவீர்கள்.

பரிகாரம்: திருச்சிக்கு அருகில் இருக்கும் திருப்பட்டூர் எனும் ஸ்தலத்தில் இருக்கும் ஈஸ்வரனையும், பிரம்மாவையும் தரிசித்து அங்குள்ள ஞானகுருவான பதஞ்சலி மாமுனிவரின் அருளாசியை அடைந்து வாழ்வில் நன்மை அடையுங்கள்.  

விருச்சிகம் 

நட்சத்திரம் :விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய 

அதிர்ஷ்ட கல் :பவளம்

அதிர்ஷ்ட வண்ணம் :வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் :1, 2, 3அதிஷ்ட திசை :தெற்கு  

நட்புக்கும், உறவுக்கும் முதலிடம் கொடுத்து எதுவந்தாலும் முடியாது என்ற வார்த்தையை தவிர்த்து காரியத்தை சாதித்துக் காட்டக்கூடிய உழைப்பில் நம்பிக்கை மிக்க, தனக்கென தனிப்பாதை அமைத்து செயலில் ஜெயம் அடையும் விருச்சிகராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் தைரியகாரகன், பலம் வாய்ந்தவன் எனப்படும் ஸ்ரீ செவ்வாய் பகவானின் வீட்டை ராசியாக கொண்ட விருச்சிகராசி நேயர்களே! இத்தனை நாள் ஸ்ரீகுரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ஆம் ஸ்தானத்தில் அமர்ந்து (சிம்மத்தில்) தடைகள் பல ஏற்படுத்தினார். இனி அவர் சிம்மராசியில் இருந்து இடம் பெயர்ந்து உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான கன்னிராசிக்கு வருகிறார். ஸ்ரீதுர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமையில் கன்னிராசிக்கு வருகிறார். இவர் கன்னிராசியில் 1-வருடம்/15-நாள்கள் (28-7-2017) வரை அங்கு இவர் சஞ்சாரம் இருக்கிறது.

ஸ்ரீ குரு பகவான் சஞ்சாரம்: மன்னவன், பொன்னவன் எனப்போற்றப்படும் குருவானவர் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான கன்னிராசியில் வருவது மிகவும் சிறப்பு. லாபகுருவாலே தனவரவு பெருகும், லட்சியம் கைகூடும், பேரும், புகழும் வந்து சேரும், பிரபல யோகமும் வந்தே தீரும். யோகசாலியான நீங்கள் இந்த வருடத்தை ஒரு பொற்காலம் எனதான் சொல்ல வேண்டும். மாபெரும் மாற்றம் கிடைக்கும். நினைத்தது எல்லாம் நடக்கும். குருபலத்தால் வருமான, வசதிவாய்ப்புகள் அதிகரிக்கும், சுபகாரியம் ஜாம், ஜாம் என நடக்கும். தனகாரகனும் பஞ்சமஸ்தானதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில் இருப்பது அனைத்து விதத்திலும் நன்மையை கொடுக்கும். குரு தனக்கு உகந்த ஸ்தானத்திற்கு வந்து இருக்கிறார். இது 12-ஆண்டுக்கு ஒரு தடவை நிகழக்கூடிய நிகழ்ச்சி ஆகும். கவலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு காரிய மாற்ற புறப்படுங்கள். ஜீவனத்தில் இருந்த இடையூரு சரியாகிவிடும். லட்சுமிகடாட்சம் மெல்ல மெல்ல உங்கள் பக்கம் வீச ஆரம்பிக்கும். மேலும் ஸ்ரீ சனீஸ்வரபகவான் உங்கள் ராசியில் இருந்து இன்னும் 6-மாதத்தில் அடுத்த ராசிக்கு பெயர்வதால், ஜென்ம சனி விலகி மேலும் நன்மையை அடையப் போகிறீர்கள். குருவானவர் தன் 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் ராசியின் 3-ஆம் ஸ்தானமான தைரியஸ்தானத்தையும், 5-ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்தையும், 7-ஆம் இடமான களஸ்திர ஸ்தானத்தையும் பார்ப்பதால் அந்த இடங்கள் மேலும் வலிமை அடைகின்றது. இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை, தைரியம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், குடும்பத்தில் இனி திருவிழா கோலம்தான். இதுவரை இருந்த கெட்டபலன் விலகி யோகப்பலன்கள் சந்தோக்ஷம் தரும் வகையில் அமைந்திடும்.

உத்தியோகஸ்தர்கள்: இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள், தொந்தரவுகள் நீங்கிவிடும். நல்ல சூழ்நிலை உருவாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.

மாணவர்கள்: பிறர் ஆச்சர்யப்படும் அளவுக்கு புத்திசதுர்யத்தை காட்டுவீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரிகள்: வருமானம் அதிகரிக்கும், வியாபாரத்தில் அதிக அபிவிருத்தி உண்டாகும். வாழ்க்கைத் தரத்திலும் உயர்வான நிலை உண்டாகும்.

தொழிலாளர்கள்: கடும் பாடுபட்டு வந்த உங்கள் நிலைமையில் மாற்றம் ஏற்படும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற காலம் இதுதான் இந்த ஆண்டை நல்லபடி பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.

பெண்கள்: பணத்தட்டுப்பாடு விலகி அதிகபடியான சொகுசான சுகசௌகர்யங்கள் செய்யும் அளவுக்கு குடும்பத்தில் சந்தோக்ஷம் நிலைக்கும்.

பரிகாரம்: செவ்வாயிற்கு அதிபதியான ஸ்ரீமுருகப்பெருமானை அதாவது குருவிற்கு குருவான அந்த திருச்செந்தூர்முருகனை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் உயர்வு தானாக வந்து சேரும். முதியோர் இல்லத்தில் உள்ள வயதானவர்க்கு உதவி செய்யுங்கள்.    

தனுசு

நட்சத்திரம் :மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய

அதிஷ்ட கல் :கனக புஷ்பராகம்

அதிர்ஷ்ட வண்ணம் :மஞ்சள்

அதிர்ஷ்ட எண் :1, 8, 9

அதிஷ்ட திசை :வடக்கு  

எந்த பிரச்சனை வந்தாலும் அதை சரிசெய்து தான் செய்து சரியாக இருக்கும் என நடுநிலையுடன், மனசாட்சிக்கு முக்கியத்துவம் தரும் தனுசுராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் பொன்னவன், மன்னவன் என எல்லாம் போற்றப்படும் குருவை ஆட்சி வீடாக கொண்ட தனுசுராசி நேயர்களே! இத்தனை நாள் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான சிம்மராசியில் இருந்து தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தார். இப்போது ஸ்ரீ துர்முகி ஆண்டு ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மராசியில் இருந்து கன்னிராசியில் (10-ஆம் இடம்) அமர்கிறார். கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்க இருப்பது நன்மை தான்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரப்பலன்: 10-ஆம் இட குரு பதவியை கெடுப்பார், கவலையும், கலகமும் தருவார். அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. விடாமுயற்சி என்பது ஒருவரை தாழ்வுநிலைக்கு கொண்டு சென்றது கிடையாது. உங்கள் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். 10-ஆம் இட குரு தன்னுடைய வேலையை சின்ன அளவிலேனும் காட்டத்தான் செய்வார். போன வருடம் முழுவதும் நன்மையை வாரி வழங்கினார் அல்லவா! சமுத்திரத்தில் குதித்து கரைகண்ட நீங்கள் குளத்து நீரில் முழ்கிவிடவா போகிறீர்கள். குரு இருக்கும் இடத்தை விட பார்வைக்கு தான் அதிக பலம், எனவே குரு தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் தனம், வாக்கு, குடும்பம் என்ற 2-ஆம் ஸ்தானத்தையும், சுகஸ்தானம் எனும் 4-ஆம் ஸ்தானத்தையும், சத்ரு/ரோகம் எனும் 6-ஆம் ஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்கள் பணத்தட்டுப்பாடு ஏதேனும் ஒரு வகையில் சரிசெய்யப்படும், குடும்பநிலை மேன்படும், சுகஸ்தானம் பலப்படும், வியாதிகள் மட்டுப்படும், எதிரிகளால் ஏற்படும் பிரச்சனையை குரு பார்வை கட்டுப்படுத்தும். இந்த ஒரு வருடம் அனுபவத்தை கொடுத்து வாழ்வில் வழி நடத்துவார். செய்தொழிலில் பாதகம் எதுவும் பெரிய அளவு இருக்காது. வேலை செய்தாலும் பாராட்டு இல்லாத நிலை இதுபோல சில பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஆண்டை வாழ்க்கை படிப்பாக அமைத்துக் கொண்டு செயல்பட்டால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்.

உத்தியோகஸ்தர்கள்: சிலருக்கு பதவியில் இருந்த தனித்தன்மை போய்விடுமோ என்ற பயம் இருக்கும். அந்த அளவிற்கு குரு கெடுதலை செய்ய மாட்டார்.

மாணவர்கள்:  யுக்தி, புத்தி, சிந்தனை அனைத்தும் டல்லடிக்கும், படிப்பில் கவனம் தேவை, மனக்கட்டுப்பாடு அவசியம். முயற்சி திருவினையாக்கும் எனும்படி கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள். 

வியாபாரிகள்: அபிவிருத்தி, ஆதாயம் இருந்தாலும் சிக்கலும், குழப்பமும் இருக்கும். செய்யும் தொழிலை கவனமாக செய்யுங்கள், மேற்கொண்டு விருத்தி செய்ய இது சரியான சமயம் கிடையாது.

தொழிலாளர்கள்: தனக்கு மேல் வேலை செய்பவர்கள் கெடுபிடி நடவடிக்கை கொஞ்சம் அதிருப்தி தரும். சோதனை காலம் தான் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டால் வாழ்வில் எதையும் சாதித்து காட்டலாம்.

பெண்கள்: அடுத்தவர்கள் மீது பழிசொல்லும் பழக்கத்தை விட்டுவிடுவது சாலச்சிறந்தது. உங்கள் நலன் மீது கவனம் செலுத்தி பிறருக்கு நன்மை எதையாவது செய்யுங்கள்.

பரிகாரம்:  10-ஆம் இடத்து குருவால் அந்த சிவனே பிச்சை பாத்திரம் கொண்டு திரிந்தார். எனவே ஸ்ரீ முருகனே தினமும் வணங்கிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை  திருச்செந்தூரில் தரிசியுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் அடையுங்கள். அங்கு இருக்கும் மேத்தா குருவை வணங்குங்கள். குருஅருள் துணைபுரியும் வாழ்க்கை சிறக்கும்.

மகரம் 

நட்சத்திரம் :உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய

அதிஷ்ட கல் :நீலக்கல்

அதிர்ஷ்ட வண்ணம் :நீலம்

அதிர்ஷ்ட எண் :5, 6, 8

அதிஷ்ட திசை :மேற்கு    

தன் தகுதியை உணர்ந்து வாழ்க்கை நடத்தி எடுத்த காரியத்தை ஊண், உறக்கம் இல்லாமல் கடுமையாக உழைத்தாலும், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை வந்துவிடுவதாலும் செய்தொழில் அமைதியின்மையும் இருந்தாலும் வாழ்வில் தன்னம்பிக்கையுடன் விடாபிடியாக முன்னேற துடிக்கும் மகரராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் ஆயுள்காரகன் என சொல்லக்கூடிய ஸ்ரீ சனிபகவானை ஆட்சி வீடாக கொண்ட மகரராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 8-ஆம் இடத்தில் (சிம்ம ராசியில்) இருந்த குருவானவர் ஸ்ரீதுர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்டு மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் அடிஎடுத்து வைக்கிறார். அங்கு அவர் சஞ்சாரம் 1-வருடம்/15-நாள்கள் வரை (28/7/2017) அங்கு இருப்பார். உங்கள் ராசிக்கு 9-ஆம் இடம் பாக்கியஸ்தானம் எனவே நீங்கள் வாழ்வில் கொடிகட்டி பறக்கப்போகிறீர்கள்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரப்பலன்:  9-ஆம் இடத்து குருவால் வாழ்வு கோபுரம் போல் உயரும், பிரமிக்கும் யோகப்பலன்களால் வசந்தகாலம் நோக்கி பயணம் செய்ய இருக்கிறீர்கள். 5-ஆம் ஸ்தானத்தை, 9-ஆம் ஸ்தானத்தை மிஞ்சி பலன் தரும் ஸ்தானம் என்பது கிடையாது. 9-ஆம் இடம் என்பது குருவுக்கு ராஜசிம்மாசனம். ஓடிப்போனவனுக்கு 9-ல் குரு என்பதற்கு ஏற்ப குரு உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார். ஜெனன ஜாதகமும் சிறப்பாக இருந்தால் நீங்கள் கோபுர உச்சிக்கே செல்வதை யாராலும் தடுக்க முடியாது. குருதான் இருக்கும் இடத்தைவிட தன் பார்வைக்கு தான் அதிக விசேஷ பலன். எனவே இவர் தனது 5-7-9-ஆம் பார்வை மூலம் உங்கள் 1-ஆம் இடமான லக்ன ஸ்தானத்தையும், 3-ஆம் இடமான தைரிய ஸ்தானத்தையும், 5-ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்தையும் பார்த்து அந்த இடத்தின் வலிமையை கூட்டுகிறார். எனவே தைரியமாக எந்த முடிவையும் எடுக்கலாம்,ஆரோக்கியம் சிறக்கும், பொதுவாக மன்னவன், பொன்னவன் என அழைக்கப்படும் ஸ்ரீகுருவானவர் பாக்கியஸ்தானத்தில் வரும்போது வாழ்க்கையில் பணப்பிரச்சனை என்ற பேச்சிற்கே இடம் கிடையாது, லட்சுமி கடாட்சம் கொழிக்கும். யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது இடத்துக்கு போகப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:  ஒரு மாதிரியாக பேசியவர்கள் எல்லாம் தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வார்கள். பேச்சில் மட்டும் நிதானம் தேவை.

மாணவர்கள்: கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் உயர் படிப்பு, தொழில் படிப்புக்கு தேர்வு ஆவார்கள். 

வியாபாரிகள்: இனிமேல் நல்ல யோகமான காலம்தான். தொட்டது ஜெயம் தான். லாபகரமான வருமானத்தை பெறப் போகிறீர்கள். வாழ்க்கையில் இனி எல்லாம் முன்னேற்றம் தான்.

தொழிலாளர்கள்: பட்டபாடு எல்லாம் காணாமல் போகும், பட்டபாட்டிற்கு கைமேல் பலன்கிட்டும். நல்ல காலம் இருக்கும் போது அதை நல்லவழியில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.

பெண்கள்: உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும் யோககரமான காலம் ஆரம்பம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் நேரம் இது.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமை தரிசியுங்கள். பார்வை இழந்தவருக்கு உதவி செய்யுங்கள் உங்கள் பலம் கூடும். 

கும்பம் 

நட்சத்திரம் :அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய

அதிஷ்ட கல் :நீலக்கல்

வண்ணம் :பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண் :5, 6, 8

அதிஷ்ட திசை :மேற்கு    

அதிகமாக பேசாமல் மவுனத்தின் மூலமே எதை கேட்டாலும் பதில் சொல்லும் திறமையை கொண்ட நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் எவ்வளவு தடை வந்தாலும் தைரியமாக முடிக்கும் கும்பராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் கர்மகாரகன், ஆயுள்காரகன், என அழைக்கப்படும் ஸ்ரீ சனீஸ்வர பகவானை ஆட்சி வீடாக கொண்ட கும்பராசி நேயர்களே! கும்பராசிக்கு 7-ஆம் ஸ்தானத்தில் இருந்த (சிம்மராசியில்) குருவானவர் இப்போது ஸ்ரீதுர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மத்தில் இருந்து கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் ஸ்தானமாகும். அவர் 1-வருடம்/15-நாள்கள் (28-7-2017) வரை கன்னிராசியில் இருப்பார்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரப்பலன்:  8-ஆம் இடத்து குருவின் சஞ்சாரம் ஆதரவு இல்லாத நிலையில் இருந்தாலும் பிரமிக்கும் குருபார்வையால் உங்கள் வாழ்க்கை நிலை உயரும் எனலாம். இதுவரை களஸ்திரம் எனும் 7-ஆம் இடத்தில் இருந்த குருவானவர் இப்போது 8-ஆம் இடம் வந்து இருக்கிறாரே என்ன செய்ய என்றால் அது ஒரு பெரிய விசயம் கிடையாது. குரு உங்கள் ராசிக்கு அதாவது சனிபகவானுக்கு சமமான கிரகம் எனவே கெடுதல் நேராது. உங்கள் ஜெனன ஜாதகம் நல்லநிலையில் இருந்தால் எந்தவிதமான பெரிய கெடுதலும் ஏற்படாது. குரு தான் இருக்கும் இடத்தை விட தன் பார்வைக்குதான் அதிக பலன் உண்டு, ஆகையால் அவர் தனது 5-7-9-ஆம் பார்வையால் 2-ஆம் பாவத்தையும், 4-ஆம் பாவத்தையும், 12-ஆம் பாவத்தையும் பார்ப்பதால் அந்த இடம் பலம் அடைகிறது. தனஸ்தானம் எனும் 2-ஆம் இடத்து பார்வையால் வாக்கு, பணம், குடும்பம் என அனைத்து தேவையையும் பூர்த்தி செய்கிறார். சுகஸ்தானத்தை பார்ப்பதால் வீடு, வண்டி என சுகத்தை கொடுப்பார். விரயத்தை பார்ப்பதால் விரயம் மட்டுப்படும். நீங்கள் தெய்வபலம் மிக்கவர்கள் ஆகையால் எந்த பிரச்சனையும் உங்கள் வாழ்வை பாதிக்காது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு ஏற்ப நீங்கள் குரு பார்வையால் நன்மை அடையப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்: நிலையற்ற மனப்போக்கில் நிம்மதி இல்லாமல் போவது தவிர்க்க முடியாது. சிலருக்கு வரவேண்டிய பதவி உயர்வில் தடைகள் ஏற்படலாம்.

மாணவர்கள்: கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அனாவசியமான விசயத்தில் ஈடுபடுவதால் சோடை போகவும் கூடும்.

வியாபாரிகள்: வியாபாரம் செழித்து பணவரவு புதிய வாய்ப்புகள் கிட்டும். பணதேக்கம், பிரச்சனைகள் இனிமேல் நீடிக்காது.

தொழிலாளர்கள்: எந்த வேலையையும், கவனமுடன் எச்சரிக்கையுடன் நிதானத்தையும் கடைபிடிப்பதால் வேலையில் பெரிய சிக்கல்கள் உருவாகாது.

பெண்கள்: வாழ்க்கையில் போராட வேண்டி இருக்கும், நிதானமும், அமைதியும் எங்கும் எதிலும் அடக்கமும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். சிரமப்பட்டுத்தான் சுபகாரிய முயற்சிகள் கைகூடும்

பரிகாரம்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் இருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் குருவின் நாளான வியாழக்கிழமையில் தரிசியுங்கள் மனவளம் இல்லாதவருக்கு உதவி செய்யுங்கள்

மீனம்

நட்சத்திரம் :பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய அதிஷ்ட

கல் :மரகதம்

அதிர்ஷ்ட வண்ணம் :வெள்ளை

அதிஷ்ட எண் :2, 8, 9

அதிஷ்ட திசை :North - East    

எல்லோரையும் சமமாக நினைக்கும் தயாளகுணமான நீங்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருந்தாலும் அவ்வப்போது அலைந்து திரிந்து சம்பாதிப்பதில் நாட்டம் கொண்டவர். கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்றவர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்த மீனராசி அன்பர்களே! 

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் ஸ்ரீகுருவானவர் உங்கள் ராசிக்கு அதிபதியாகிறார். 6-ல் சிம்மராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குருவானவர் இப்போது உங்கள் ராசிக்கு 7-ல் கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். ஸ்ரீதுர்முகி ஆண்டு ஆடி மாதம் 27-ஆம் தேதி (11-8-2016) ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை குருவானவர் மீனராசிக்கு 6-ல் இருந்து 7-க்கு பெயர்ச்சியாகிறார். கன்னிராசியில் 1-வருடம்/15-நாள்கள் வரை (28-7-2017) அங்கு அவர் சஞ்சரிக்கிறார். 

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரம்:  ஏழாமிட குருவின் சஞ்சாரம் அற்புத வளர்ச்சியை தரும். மாபெரும் மாற்றம் உண்டு. உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் இப்போது ஸ்ரீகுரு பகவான் கன்னிராசியில் இருந்து உங்கள் ராசியை தனது 7-ஆம் பார்வையால் பார்ப்பதால் தனது வீட்டின் வலிமையை அவர் நிச்சயம் கூட்டுவார். குருவானவர் மீனராசிக்கு 7-ல் வருவது ஒரு சூப்பர் அமைப்பு தான், குதூகலம் நிரம்பி வழியும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், உங்கள் தகுதியும்,மதிப்பும், மரியாதையும் உயரும் உன்னதமான காலம், ஆன்மீகபலம் அதிகரிக்கும். குருதான் இருக்கும் இடத்தில் கொடுக்கும் பலனைவிட குரு பார்வைக்குத் தான் பலம் அதிகம். ஆகவே குரு தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 11-ஆம் ஸ்தானமான லாபத்தையும், 1-ஆம் ஸ்தானமான லக்னத்தையும், 3-ஆம் ஸ்தானமான தைரியஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்தொழில் லாபம், உடல் ஆரோக்கியம், தைரியமான மனோனிலையையும் தருகிறார். குரு பார்வை கோடி புண்ணீயம் எனும் வார்த்தைக்கு ஏற்ப அவரின் முழுப்பார்வையும் உங்கள் மீனராசி மீது படிவதால் நீங்கள் சுபிச்சமான வாழ்வை பெறப்போகிறீர்கள். தீர்த்த யாத்திரை செல்ல சந்தர்ப்பம் தேடி வரும். கடன்பாக்கி வசூலாகும், எதிரிகள் அஞ்சி ஓடுவார்கள், தொட்டது துலங்கும். இனி எதிலும் சந்தோஷம், மகிழ்ச்சி தான் இதில் சந்தேகமில்லை. மகாலட்சுமி கிருபை உண்டு. தாய், தந்தை வழியில் உதவி கிட்டும். தானம், தருமம் செய்வீர்கள். புதிய வாழ்வு ஆரம்பம்.

உத்தியோகஸ்தர்கள்: முக்கியத்துவம் அதிகரிக்கும், வருமானங்கள் கூடும், இனி வாழ்க்கையில் இருந்த சிரமங்கள், அலைச்சல், திரிச்சல் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். புது வாழ்வு பிறக்கும்.

மாணவர்கள்: கடின உழைப்பு, கவனமாக படித்தால், குரு பார்வையும் கிடைப்பதால் நீங்கள் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும்.

வியாபாரிகள்: வியாபாரம் செழித்து வளரும், லாபகரமான செய்தொழில் அமைந்து வாழ்வை நன்னிலைப்படுத்தும் இது பொன்னான காலம் இதை சரியாக பயன்படுத்தி உங்கள் நிலையை மேன்படுத்துங்கள்.

பெண்கள்: வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரியும், தோற்றத்தில்  வசீகரம் இருக்கும், உள்ளத்தில் அமைதி பிறக்கும், முகம் பிரகாசிக்கும்.   

தொழிலாளர்கள்: ஊக்கம் உங்கள் உழைப்பு இப்போது தான் பலன் தரும். அதிக உழைப்பை சரியான வகையில் போட்டு முயற்சி செய்தால் இனிமேல் நல்ல முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் அடையப்போகிறீர்கள். 

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திட்டை ஸ்ரீராஜ குருவை அவரின் தினமான வியாழக்கிழமை தரிசித்தால் வாழ்வில் இருந்த தடை விலகி நல்ல வழி பிறக்கும். படிப்பு இல்லாத குழந்தையின் கல்விக்கு உதவி செய்யுங்கள்.

நிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18ஆம் நாள் எதிர்வரும் (2.8.2016) செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

இந்த குரு பெயர்ச்சியினால் கிடைக்கக் கூடிய பலன்கள் பற்றிய சுருக்கம்  வருமாறு:

## யோகம் தரும் பலன்களைக் கொண்ட ராசிகள்: ரிஷபம்,  சிம்மம்,  விருச்சிகம், மகரம்,  மீனம்.         

## குரு வழிபாட்டினால் யோகம் அடையும் ராசிகள்: மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம்,  தனுசு, கும்பம். 

1) மேஷம்- 6ஆம் இடம் (ரோகஸ்தானம்)  50% நன்மை.

2) ரிஷபம்- 5ஆம் இடம் (பூர்வ புண்யஸ்தானம்) 70% நன்மை

3) மிதுனம்- 4ஆம் இடம் (கேந்திரஸ்தானம்) 50% நன்மை (அர்த்தாஷ்டம குரு)

4) கடகம்- 3ஆம் இடம் (தைரியஸ்தானம்) 40% நன்மை

5) சிம்மம்- 2ஆம் இடம்  (தனஸ்தானம்) 90% நன்மை

6) கன்னி -ஜென்ம ராசி 50% நன்மை (ஜன்ம குரு)

7) துலாம் -12ஆம் இடம் (விரயஸ்தானம்) 60% நன்மை

8) விருச்சகம் -11ஆம் இடம் (லாபஸ்தானம்) 95% நன்மை   (சுப லாப குரு)

9) தனுசு -10ஆம் இடம் (ஜீவனஸ்தானம்) 55% நன்மை

10) மகரம் -9ஆம் இடம் (பாக்யஸ்தானம்) 90% நன்மை

11) கும்பம் -8ஆம் இடம் (ஆயுள்ஸ்தானம்) 40% நன்மை. (அஷ்டம குரு)

12) மீனம் -7ஆம் இடம் (களத்திரஸ்தானம்) 100% நன்மை.