பிறக்கும் சித்திரை புத்தாண்டின் பலன் என்ன? மலைமேகு சிவாச்சாரியார் விளக்குகிறார் (VIDEO)

சிறப்பு பலன்கள்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 13- பிறக்கும் ஏவிளம்பி சித்திரை புத்தாண்டை நாளை மலேசியா முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளுடன் இந்துகள் கொண்டாடுகின்றனர். அதேவேளையில் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் எத்தகைய பலன்கள் இருக்கும் என்பது குறித்து கோலாலம்பூர், பந்தாய் ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் தலைமை குருக்கள் மலை மேகு சிவாச்சாரியார் விளக்கம் அளித்துள்ளார்.

நாளை அதிகாலை 3.28 மணியளவில் பிறக்கும் ஏவிளம்பி வருடம், பொதுவாகவே மத்திய நிலையிலான பலன்களைத் தருகிறது. வருடம் முழுதும் 50 விழுக்காடு ஆதாயமும் 50 விழுக்காடு விரயமும் என சமசீரான ஆண்டாக ஏவிளம்பி விளக்கும் என மலை மேகு சிவாச்சாரியார் கூறியுள்ளார்.