யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் ஜோதிடவியல் வல்லுநர்கள். காதல் என்ற மந்திர சொல்லுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். 

எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. மேலும், ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது.

காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அம்சங்கள், பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையும் பிராப்தமும்தான் காரணம். லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை, ஜாதகத்தில் அவர்களுக்கு இருக்கும் பலம் ஆகியவைதான் காதல் திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. அவரவர் ராசியை படித்து இன்புறுங்கள். 

மேஷம்

எதிலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும். இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். 

ரிஷபம் 

இவர்களை ஜெமினின் கணேசன் தான் என்று கூற வேண்டும். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் நபரை 'பிராக்கெட்' போடுவதில் கில்லாடிகள். இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும், பரிசுத்தமாகவும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெரும்.

மிதுனம்

இவர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறரிடம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வார்கள். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடகம்

இவர்களுக்கு காதலுடன் ஏதோ ஒரு பகையின் காரணமோ என்னவோ தெரியவில்லை. கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லதாம்.  

சிம்மம்

இவர்களை காதல் மன்னன் என்று சித்தரிக்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். இவர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் மகிழ்ச்சியடைவார். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர்.

துலாம்

காதல் இவர்களுக்கு கை வந்த கலை. துலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளது. காரணம் சுக்கிரனின் ஆட்சி வீடு இது.  துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். அதே நேரத்தில் இவர்கள் காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும்.

தனுசு

காதலுக்காக பிறந்தவர்கள். தனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.

மகரம்

காதல் என்ற சொல்லுக்கு தன்னையே அற்பனிப்பவர்கள். மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்கள் உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர்.காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். 

மீனம்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். மீன ராசிக்காரர்கள் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.

தங்களுக்கான வாழ்க்கைத் துணையை மெட்ரிமோனி சேவையில்  நாட வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.  வேலைப்பளு,  தொழிலில் முன்னேற்றம், பணம் சேர்ப்பது  ஆகியவற்றில்  அதிகம் செலுத்துவதிலேயே, பலர் திருமணம் செய்யும் வயதையே தாண்டி விடுகின்றனர். இந்த சூழலில் ஒரு சிலருக்கு மட்டுமே தனக்குரியவரை சட்டென்று சந்தித்து பார்வைகளைப் பரிமாறிக்கொண்டு காதலால்   ஈர்க்கப்படும் வரம்  அமைகிறது.

ஆனாலும், இப்போதெல்லாம் பணத்தை வாரி இறைத்து  திருமணம்  செய்துவைத்தாலும்,  திருமணமான சிறிது காலத்திலேயே   விவாகரத்து செய்து பிரிந்து விடுகின்றனர். 

ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.

ஜாதகத்தில் கட்டம் சொல்வது என்ன? திருமண வயதில் மகனையோ, மகளையே வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு 20 வயதை கடந்து விட்டாலே ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு வரன் தேட கிளம்பிவிடுவார்கள். சில குழந்தைகளோ பெற்றோர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தாங்களே தங்களுக்கு ஏற்ற ஜோடியே தேடி காதலித்து பெற்றோரிடம் கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் காதல் திருமணங்கள் சகஜமாகிவிட்டது. ஜாதி, மதம் மாறி திருமணம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம்தொழில் மற்றும் வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று வாழும் சூழ்நிலை இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.

தொழில் நுட்ப வளர்ச்சி தகவல் தொழில் நுட்ப சாதனங்களான செல்போன், இன்டர்நெட் போன்றவை மக்களிடையே பிரபல்யமாகி விட்ட சூழ்நிலையில், யாரையும் அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நொடி கணக்கில் தொடர்பு கொண்டு விடலாம் . ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், வீடியோ கால் என அறிவியல் வளர வளர ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் அதிகமாக அதிகமாக காதலிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகின்றது. பெற்றோர்களின் கவலை இன்றைக்கு இளையதலைமுறையினர் படிப்புக்காகவும், வேலைக்காகவும் சொந்த ஊர், நாட்டை விட்டு பிற ஊர், பிற நாடு என்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்பதால் பெரும்பாலான பெற்றோர்களின் மனக்கவலை நம்முடைய பையனுக்கு அல்லது பெண்ணுக்கு நாம் பார்த்து வைக்கும் திருமணமா அல்லது அவர்களே தங்களுக்குரிய ஜோடியை தேர்ந்து எடுத்து கொள்வார்களா என்பதுதான். எனவேதான் ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்கும் போதே தெளிவாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

பெற்றோர்களின் கவலை இன்றைக்கு இளையதலைமுறையினர் படிப்புக்காகவும், வேலைக்காகவும் சொந்த ஊர், நாட்டை விட்டு பிற ஊர், பிற நாடு என்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்பதால் பெரும்பாலான பெற்றோர்களின் மனக்கவலை நம்முடைய பையனுக்கு அல்லது பெண்ணுக்கு நாம் பார்த்து வைக்கும் திருமணமா அல்லது அவர்களே தங்களுக்குரிய ஜோடியை தேர்ந்து எடுத்து கொள்வார்களா என்பதுதான். எனவேதான் ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்கும் போதே தெளிவாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

கிரகங்களின் சேர்க்கை காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா என்பதல்லாம் பிறக்கும் போது கிரகங்கள் நின்ற நிலையும், சேர்க்கையும், பார்வையையும் பொறுத்து அமையும். சில கிரகங்களுடைய சேர்க்கையும், பார்வையும், இருப்பிடமும் கண்டிப்பாக அந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ காதல் திருமணம் தான் நடக்கும். யார் தடுத்து நிறுத்தினாலும் அந்த திருமணம் நடந்தே தீரும். ஆனால் காதல் திருமணத்திற்கு உரிய கிரகங்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில் காதல் திருமணம் நடந்தாலும் அந்த காதல் திருமணம் நீடித்து நிற்காது. ஒருவருடைய பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருந்த நிலை கொண்டு அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து அவருக்கு எத்தகைய திருமணம் மகிழ்ச்சியை தரும் என்பதை தீர்மானித்து விடலாம்.

                        (சுக்கிர பகவான்)

களத்திர ஸ்தானம்

ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் வீடு, களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.

புத்திரகாரகன் 

குரு ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர் குருபகவான். இவர் யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றாலே சூத்திரதாரி. அதாவது ஒரு செயலைச் செய்பவர் அல்லது செய்யச் சொல்லி தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

காம காரகன் 

சுக்கிரன் சுக்கிரன்தான் காதலின் ஏகபோக பிரதிநிதி. சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு அதிபதி ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர். ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர்.

மனதின் அதிபதி சந்திரன்

 நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டே அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.

வீரியம் தரும் செய்வாய் 

செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

நரம்புகளின் அதிபதி புதன் 

புதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

கட்டங்களில் கிரகங்கள்

 ஒருவருக்கு காதல் ஜெயிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12ம் வீடுகள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். காதலுக்கு வீரம் அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் வீடு தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரத்தையும் வீரியத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

3ம் வீட்டில் கிரகங்கள்

 3ம் வீட்டில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய தசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.

சுகஸ்தானத்தில் கிரகங்கள் 

ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம்.

ஒருத்தனுக்கு ஒருத்தி 

நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் அல்லது காதலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் ஜெயிக்குமா? 

ஓருவரின் ஜாதகத்தில் 7ம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும்.

இனிக்கும் காதல்

இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும்.

தடம் மாறும் காதல் 

ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.

ரகசிய காதல் 

குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

காதல் தோல்வி

 ஒருவரின் ஜாதகத்தில் 12ம் இடமான அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.

காதல் வேட்கை அதிகம் 

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.

மனம் மாறும் காதலர்கள் 

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது.

வயதில் மூத்த காதலி 

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

 

ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு விருட்சங்கள் உண்டு, அவை

 

 1. அஸ்வினி - எட்டி,

 2. பரணி - நெல்லி,

 3. கிருத்திகை - அத்தி,

 4. ரோஹிணி - நாவல்,

 5. மிருகசீர்ஷம் - கருங்காலி,

 6. திருவாதிரை - செங்கரு,

 7. புனர்பூசம் - மூங்கில்,

 8. பூசம் - அரசு,

 9. ஆயில்யம் - புன்னை,

 10. மகம் - ஆலம்,

 11. பூரம் - பலா,

 12. உத்திரம் - அரளி,

 13. ஹஸ்தம் - வேல்,

 14. சித்திரை - வில்வம்,

 15. ஸ்வாதி - மருதை,

 16. விசாகம் - விளா,

 17. அனுஷம் - மகிழம்,

 18. கேட்டை - பிராய்,

 19. மூலம் - மாமரம்,

 20. பூராடம் - வஞ்சி,

 21. உத்ராடம் - பலா,

 22. திருவோணம் - எருக்கு,

 23. அவிட்டம் - வன்னி,

 24. சதயம் - கடம்பு,

 25. பூரட்டாதி - தேமா,

 26. உத்திரட்டாதி - வேம்பு,

 27. ரேவதி - இலுப்பை.

இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய

தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய

நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய

பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய

சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய

மூல காரணீய கால காலதே நம: சிவாய

பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய

துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய

ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய

அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய

பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய

பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய

சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய

ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய

நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய

காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய

ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய

ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய

ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய

ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய

ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய

ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய

சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய

மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய

மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய

ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய

பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய

அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய

அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய

தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய

உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய

ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய

ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய

ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய

ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய

ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய

தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய

ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய

பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய

ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய

மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய

ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய

நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய

பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய

துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய

சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய

தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய

மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய

ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய

கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய

ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய

அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய

அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய

தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய

கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய

தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய

ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய

ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய

ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய

பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய

பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய

சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய

நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய

குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய

சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய

இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய

கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய

ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய

ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய

விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய

பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய

பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய

தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய

சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய

பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய

யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய

சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய

ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய

ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம:

கபாலினே நம: சிவாய

பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய

லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய

சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

 

வருடத்தில் 365 நாட்கள் இருந்தாலும். எல்லா நாட்களிலும் திருமணத்தை நடத்தி விட முடியாது. திருமணம் செய்வதற்கென்றே சுபமுகூர்த்த தினங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும்,  மணமகன் மற்றும் மணமகனின்  ஜாதகத்தைத் தீர ஆராய்ந்த பின்னரே திருமண தேதியைக் குறிக்க முடியும். 

திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் புனிதமான காரியம் ஆகும். ஆண் பெண் இருவரும் இணைந்து தங்களது எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைக்க திருமணமானது மங்களகரமான ஒரு சுப நாளில் செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் செய்ய உகந்த நட்சத்திரங்கள், திதிகள், கிழமைகள் என உண்டு.

பொதுவாக ரோகிணி, மிருக சீரிஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மிகவும் உத்தமம். அசுவினி, புனர்பூசம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களிலும் திருமணம் செய்யலாம். துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி திதி நாளில் திருமணம் செய்யலாம். மேற்குரிய நட்சத்திரம், திதி இணைந்து, ஞாயிறு,  திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் திருமணம் சார்ந்த சுப காரியங்கள் செய்வது மிகவும் உத்தமம்.

குறிப்பாக மேற்கூறிய நட்சத்திரம், திதி, கிழமை நாளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு கும்ப லக்ன நேரத்தில் முகூர்த்த லக்கினத்திற்கு 3,6,11ல் பாவிகள் இருப்பது நல்லது. 6,8ல் சுக்கிரன் புதன் இருந்தால் கெடுதி 2,3ல் சந்திரன் இருப்பதும், 7ல் யாரும் இல்லாமல் இருப்பது மிகவும் உத்தமம்.

மேற்கூறிய விதிகள் பொதுவான விஷயம் என்றாலும் திருமணம் செய்து கொள்ளும் மண மக்களுக்கு மேற்குரியவை உகந்ததாக இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.

குறிப்பாக திருமணம் நாள் ஆனது ஆண் பெண் இருவருக்கும் தாரா பலன் உள்ள நட்சத்திர நாளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சில நேரத்தில் ஆண் பெண் இருவருக்கும் தாரா பலன் வராது. அதாவது ஒருவருக்கு தாரா பலன் வரும். ஒருவருக்கு தாரா பலன் வராது. இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு தாரா பலன் வருகிறதா என்று பார்த்த விட்டு இருவருக்கு ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்த நட்சத்திரமானது 7வது நட்சத்திரமாக இருக்க கூடாது. தாரா பலன் என்பது ஆண் பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் 2,4,6,8,9,11,13,14,17,18,20,22,24,26,27 நட்சத்திர நாளாகும். இது மட்டும் இன்றி, இருவருக்கும் சந்திராஷ்டம் நாளாக முகூர்த்த நாள் இருக்க கூடாது.