கபாலியும் மலேசியத் தமிழர்களும் மகிழ்ச்சி

Vaasagar padaippu
Typography

ஓய்ந்து முடிந்தன ரஜினி மற்றும் பா.இரஞ்சித் இருவரும் ஏற்படுத்திய ஆழிப்பேரலை ஒருவகையாக உலகமெங்கிலும், இன்னும் சொல்லப் போனால் ஆழிப்பேரலையின் தாக்கம் அவ்வுளவு எளிதில் மறைந்துவிடாது. அப்படித்தான் ரஞ்சித் அவர்களின் கபாலி திரைப்படம் ஏற்படுத்திய தாக்கமும். பலரின் மனங்களில் அது இன்னும் அழியா கலங்கரை விளக்காக எரிந்து கொண்டிருக்கின்றன குறிப்பாக மலேசியத்தமிழர்களின் ஆழ்மனங்களில்

கபாலி படத்தின் கதைக்களமானது மலேசியத்தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலித்தாலும், உண்மையிலே திரைக்கதையின் தன்மையானது நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எந்த வகையான போராட்டங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மக்களின் உயிரோட்டமான மெய்யியலாகவே அமையப்பெற்றது. நிஜமாகவே இது இயக்குனரின் தனித்திறமையா அல்லது இயற்கையாகவே அமையப்பெற்றதா என்பது புரியாத புதிர்தான், அப்படி ஒரு வேலை இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமானல் நிச்சயமாக விளக்கம் கேட்பேன்.

(நான் எங்கே போனாலும் என் பின்னால் சாதி வந்து நிற்கிறது என்று அலட்சியமாக இயக்குனர் தனது பேட்டியில் குறிப்பிட்டது எத்தனை வேதனைக்குரியமான வலியை அவர் தன்னுடைய இளவயதிலியே அனுபவித்து வந்துள்ளார் என்பதை நன்குணர முடிகிறது. இனி அம்பேத்கர் போன்றோர் பிறக்க வேண்டும் அதுவும் மேல்மட்டத்தில் பிறக்க வேண்டும் என்று) அதே பேட்டியில் அவர் கூறியது இயக்குனரின் பண்பட்டுள்ள சிந்தனை தெளிவை மெய்ப்பிக்கின்றன

மேலோர் கீழோர் என்கிற தத்துவம் ஆண்டாண்டு காலமாக புரையோடிப்போன சிரங்காய் நம்மை பிடித்துள்ள நோய், இந்தியாவைத் தவிர்த்து இந்த நோய் உலகமெல்லாம் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் பல்வேறு வடிவங்களில் இருந்து வந்துள்ளதை கடந்த காலங்களின் நடந்த கருப்பு சரித்திரங்கள் அதற்கு எடுத்துக்காட்டு.  

ஆயினும் பண்டைய இந்தியாவில் பரவலாக காட்டுத்தீப் போன்று பரவிய இந்த நோய், இன்று வேறோரு வடிவத்தில் பரிணாம வளர்ச்சி கண்டு கண்ணுக்கு தெரியாமல் உள்ளுர தீயில்லாமல் பரவி கொண்டிருப்பதை இயக்குனர் நன்கு உணர்ந்தே இருக்கின்றார், அவருக்குள்ளும் ஒரு தீ ஆழ்மனதில் பற்றி எரிந்து கொண்டிருந்ததின் விளைவின் வெளிப்பாடாய் வெடித்து சிதறியிருப்பதுதான் கபாலி திரைப்படமாக.

இது நாள் வரை மலேசியா என்கிற ஒரு நாட்டின் எழில்மிகு அழகியல்களை மட்டுமே காண்பித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த்திரைப்பட இயக்குனர்களில் மத்தியில், முதன் முதலாக அந்த எழில்மிகு அழகியல்களுக்கு பின்னாளில் இருக்கும் ஒரு இனத்தின் வலியையும், சமூக சிக்கலையும் தன்னால் முடிந்தவரை வெளிக்கொணர்ந்த இயக்குனரை மனதார பாராட்ட வேண்டும் மலேசியத்தமிழர்கள் அனைவரும்

இயக்குனர் முடிந்த வரை வெளிக்கொணர்ந்துள்ளாரே தவிர முழுமையாக பதிவு செய்யவில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அந்த மாபெரும் வரலாற்றுப்பணிகளை இம்மண்ணில் பிறந்து வளர்ந்து உணர்வுப்பூர்வமான இம்மண்ணின் மைந்தர்களின் பிள்ளைகளால் மட்டுமே சாத்தியப்படும் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. அதற்கான தொடக்கத்தையும்  பொறுப்பையும் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் கபாலி திரைப்படத்தின் மூலம் உணராமல் உணர்த்தி சென்றுள்ளார்

ஒட்டுமொத்தமாக இயக்குனர் அவர்கள் முழுமையான ஆண்டான் அடிமை, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட அல்லது விடுதலை வேட்கையில் போராடும் அனைத்துக்குமான சிக்கல்களுக்கு முழுமையான தீர்வை வழங்கவிட்டாலும், இது நாள் வரையிலும் உள்ளுக்குள்ளே புலம்பி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தோர்களின் மன தைரியத்தையும் வலிமையையும் கூட்டி தந்திருப்பது இயக்குனருக்கு கிடைத்த வெற்றியாக கருதலாம்

புரட்சியைத் தவிர்த்து மாற்று வழிக்கான எளியப்பாதை அதிகாரத்தை கைப்பற்றுதலே அதனை மலேசியத்தமிழர்களும், உலகத் தமிழர்களும் உணர வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி கபாலி திரைப்படத்திற்கு அனைத்து வகையிலும் உதவிப்புரிந்து, வெளியிடவும் அனுமதித்த ஆளும் மலேசியா தேசிய முன்னணி அரசாங்கமானது தனது சொந்த காசில் சூனியத்தை வைத்துக் கொண்டது என்றால் மிகையில்லை, ஆதலால் பா.இரஞ்சித் அவர்களை பாராட்டவும் என்னால் இருக்க முடியவில்லை என்று சொல்லி கொண்டு என் பேனா எழுதிய முதல் தமிழ்த் திரைப்பட விமர்சனமாகவும் அறிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

 

ஆக்கம்,  

சிவசீலன்

தலைமை நிருபர்

ஜனநாயக செயல்கட்சி தலைமையகம்.

 

 

*வாசகர் படைப்பு முழுக்க முழுக்க வாசகர்களின் சொந்த கருத்தாகும். படைப்புகளுக்கும் வணக்கம் மலேசியா டாட்காம் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS