இப்போதெல்லாம் சுவரொட்டிகளில் பார்க்கும் போது தமிழ் பெயர்களுக்கு பின்னாலேயே இந்தஜிஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சிதம்பரம் ஜி, கோபாலன் ஜி, சங்கர் ஜி என்று ஒரே ஜிஜி பெயர்களாக இருக்கின்றன.

வடவர் ஒருவரின் பெயருக்கு பின் மரியாதையைக் குறிக்க மன்மோகன் ஜி, மோடி ஜி என்றுஜிபயன்படுத்துகின்றனர்.

தெலுங்கர் சந்திரபாபு காரு, கிருஷ்ணய்யா காரு என்று மரியாதையை குறிக்ககாருபயன்படுத்துகின்றனர்.

தமிழ் ஆர்வம் மட்டும் வளர்த்துக் கொள்ளவில்லை.

தமிழனுக்கு தமிழின் தேவையை தெரிந்துக்கொள்ள தெரிய வில்லை!

ஜி என்ற வடமொழி வார்த்தைத்தான்

மரியாதையானது என்று  நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் ஒருவரின் பெயருக்கு பின்னால் மரியாதையை குறிக்க பயன்படும் சொல்ஆர்

ஒளவை= ஒளவையார்

பாரதி=பாரதியார்

மாறன்=மாறனார்

கோதை=கோதையார்

கண்ணகி=கண்ணகியார்

கரிகாலன்=கரிகாலனார்

சாத்தன்=சாத்தனார்

நச்செள்ளை=நச்செள்ளையார்

பேச்சி=பேச்சியார்

இனி தமிழர் பெயருக்கு பின்னால், ஜிஜி என்று பயன்படுத்தாமல், ‘ஆர்என்று பயன்படுத்தவும்......  படித்ததில் பிடித்தது

 

இந்துக்களின் புண்ணிய நதி எது என கேட்டால் அனைவரும் சொல்வது கங்கா, யமுனா, சரஸ்வதி. காசிக்குப் போனால் கங்கையைக் காணலாம், தாஜ்மகாலுக்குச் சென்றால் யமுனையைக், வேதத்திலும், மகாபாரதத்திலும் கூறப்படும் சரஸ்வதி எங்கே?
 சரஸ்வதி நதி  வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்தில் அனைத்து நதிகளிலும் சிறப்பானதாக சரஸ்வதி நதி புகழப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க புண்ணிய நதி 4000 ஆண்டுகளுக்கு முன்பதாகவே மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.  
 ஆனால் இந்தியாவின் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றத் தேர்தலுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, மாயமாகிப் போன சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சரஸ்வதி நதியைத் தேடும் படலத்தில் தற்போது ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் களமிறங்கியுள்ளன.
 இதற்கான முதல் கட்ட முயற்சியாக, ராஜஸ்தான் மாநிலம் மத்திய அரசாங்கத்திடமிருந்து 70 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ளது.
காணாமல் போன சரஸ்வதி நதியைத் தேடுவதற்காக,  ராஜஸ்தான் மாநிலம் வடிகால், நீர் திட்டமிடல் ஆணையத்தை அமைத்துள்ளது (RRBWRPA) .
இதனிடையே ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் வெளியிட்ட வரைபடத்தில், சரஸ்வதி நதி அமைந்திருந்ததாக கருதப்படும் இடத்தில் நிலத்தடி நீர் சுரப்புக்கான தடங்கள் காணப்படுவதை உறுதி செய்துள்ளது. எனினும், இந்த நிலத்தடி நீர் சுரப்பு தடங்கள் தான் காணாமல் போன சரஸ்வதி நதி என்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தான் அரசாங்கம், சரஸ்வதி நதி மீதான தேடலில் இதுவரை கிடைத்த தகவல்களை அடுத்த ஆறு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என RRBWRPA ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ராஜஸ்தானைப் போன்று ஹரியானா மாநிலமும் சரஸ்வதி நதி தேடலுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அரியானா சரஸ்வதி பாரம்பரிய அபிவிருத்தி சபையை உருவாக்கியுள்ளது. இச்சபை ஐ.நா-வின் கீழ் இயங்கும் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ மற்றும்  ASI எனப்படும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கூடத்துடன் இணைந்து செயலாற்றும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே வற்றிவிட்டதாகவும்,காணாமல் போனதாகவும் கூறப்படும் சரஸ்வதி நதி தற்போது கண்டுபிடிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என பலருக்கும் சந்தேகம் ஏற்படலாம். ஆனால், சாத்தியங்கள் இருப்பதாகவே காட்டுகின்றன இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.
கடந்த 2003-ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் ASI எனப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம்,  ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை இணைக்கும் 10 இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
 இது வரை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள், தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே பாயும் “கக்கார் நதி” தான் பண்டைய இந்திய இலக்கியங்களிலும், வேத இதிகாசங்களிலும் கூறப்படும் சரஸ்வதி நதி என்ற கணிப்பும் நிலவுகிறது.
ஆனால் இந்த கணிப்பு ஒன்றும் புதியது அல்ல.
கிழக்கு நோக்கிய கிளைநதியான கக்கார் நதி, அப்போதைய காலக்கட்டத்தில் “சர்ஸ்சுதி” என்றே அழைக்கப்பட்டுள்ளதாகவும், சரஸ்வதி என்ற சொல்லின் திரிபு தான் “சர்ஸ்சுதி” என்றானதாகாவும்,  1880-ஆம் ஆண்டு இந்த கக்கார் நதி குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த மார்க் ஆவ்ரல் ஸ்டேயின் என்கிற தொல்பொருள் ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.
 இந்த கணிப்புக்கு மேலும் நம்பிக்கையளிக்கும் வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு  “The Lost River; On the Trail of Saraswati’ எனும் புத்தகத்தில், பிரஞ்சு அறிஞர் மிக்கேல் டானினோ, சரஸ்வதி நதி என்பது  கற்பனை அல்ல என்றும் கக்கார் நதியுடன் தொடர்பு படுத்தப்படுவதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே இவ்வாண்டு மே மாதம், ஹரியானா மாநிலம், சரஸ்வதி நதியைத் தேடுவதற்கான பணியைத் தொடங்கிய போது ஆற்றுப்படுகையில் சில நீர்க்குளங்களை அடையாளம் கண்டது. ஆனால் அதன் பின்னர், மற்ற ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சரஸ்வதி நதி புண்ணிய நதியாக வேதகாலத்தினின்றே புகழப்படுகிறது. ரிக்வேதத்தின் பாடலில் சரஸ்வதியானவள் அம்பிதமே, நாதிதமே, தேவிதமே சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள். இதன் பொருள் “சிறந்த நதி, சிறந்த பெண் கடவுள்” என பொருள்படுகிறது.

முற்றிலும் காணாமல் போன ஒரு நதியைத் தேடுவது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு எத்தனைக் காலம் தேவைப்படும் என்றே குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால்,மோடி தலைமையிலான அரசாங்கம் காணாமல் போன நதியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சரஸ்வதி நதி தேடல் வசமாகுமா? காத்திருப்போம்.

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். 

என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.

என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்.

ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.

உலகம் உனக்கு சொர்க்கமாகும்! என்றார், குரு.