'பொன்னியின் செல்வன்'  நாடகத்தில் ரஜினி-கமல்!

Cinema
Typography

 சென்னை, ஏப்ரல் 11- நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கான நிதியைப் பொதுமக்களிடம் வசூலிப்பதில் நடிகர் சங்கம் உறுதியாக உள்ளது. நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளனர். 

 பொன்னியின் செல்வன் நாடகத்தை கமல், ரஜினி நடிப்பில் வெளிநாடுகளில் நடத்தலாம் என சங்க தலைவர் நாசர் யோசனை கூறியிருப்பதாகவும், அதற்கு கமல், ரஜினி சம்மதித்தால் உடனே களத்தில் இறங்கி அதற்கான வேலைகளை செய்ய சங்கம் தயாராக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

 சொந்த ஆதாயத்துக்காக நடிகர் சங்கம் இந்த முடிவுக்கு வந்திருந்தாலும், கமல், ரஜினி நடிப்பதால், முற்றிலுமாக கைவிடப்பட்டுவரும் நாடகக்கலை அதன் மூலம் புத்துயிர் பெறவும் வாய்ப்புள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS