'விசுவாசம்' படப்பிடிப்பு ரத்து! அஜித்துக்கு எதிராக விஷால் சதியா?

Cinema
Typography

சென்னை, மார்ச். 18- நடிகர் சங்க விவகாரங்களில் ஒத்துப் போகவில்லை என்பதற்காக வெளிமாநில படப்பிடிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தொடர்ந்து அஜித்திற்கு சிக்கலை ஏற்படுத்துகிறார் நடிகர் சங்கச் செயலாளர் விஷால் என்று சினிமா வட்டராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித்தின் "விசுவாசம்" படத்தின் படப்பிடிப்பு  ஹைதராபாத்திலுள்ள  திரைப்பட நகரில் மார்ச் 23ஆம் தேதி முதல்  படமாக்கப் படவிருந்தது. இந்நிலையில் இந்தப் படப் படிப்பை நடத்தக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார் விஷால். இதனால் அஜித்திற்கு சிக்கல் ஏறபட்டுள்ளது.

நடிகர் சங்க நிகழ்வுகள் எதிலுமே அஜித் கலந்து கொள்வதில்லை. ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற சங்கடம் நடிகர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு இருந்து வருகிறது.

அஜித் நாயகனாக நடித்து, சிவா இயக்கத்தில் உருவாகிவரும் 'விசுவாசம்' படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். வரும் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் படம் பிடிப்பை தொடங்க முடிவெடுத்து, அங்குள்ள ராமோஜி திரைப்பட நகரில் செட்டும் போடப்பட்டு விட்டது.

இந்நிலையில், மார்ச் 23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்படும் படப் பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதுவும் வெளியிடப் படக்கூடாது என்ற போராட்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர் சங்கம், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் படப் பிடிப்புகள் நடத்தப்படுவதை ரத்து செய்துள்ளது. தற்போது மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலங்களிலோ, அல்லது வெளிநாடுகளிலோ படப்பிடிப்புகள் நடத்தப்படக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டிலுமே முக்கிய பொறுப்புகளை  நடிகர் விஷால் வகிக்கிறார். பொதுவாக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பளர் சங்கம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக அஜித் மதிப்பதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.

சங்கத் தேர்தல் மற்றும் கட்டடப் பூஜை ஆகிய பல நிகழ்வுகளை அஜித் புறக்கணித்து விட்டார். மேலும் அண்மையில் மலேசியாவில் நடந்த நட்சத்திரக் கலை விழாவையும் அஜித் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக,  அஜித் தனது படப்பிடிப்புக்காக வெளிமாநிலத்தில் தேதி குறித்து பணிகளை முடித்திருக்கும் தருணத்தில் படபிடிப்பை நடத்தக்கூடாது என்ற உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் விடுத்திருப்பதாக பரவலாக பேசப்படுகின்றன.

அஜித்திற்கு மறைமுகமாக நெருக்குதல் அளிக்கவும் சிக்கலை ஏற்படுத்தவும் விஷால்  திட்டம் போடுகிறார் என்ற கருத்தும் பரவலாகி வருகிறது. இது, அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS