உணவுக்கு ட கூட பணமில்லாமல் நோயில் தவிக்கும் பிரபல நடிகை!

Cinema
Typography

மும்பை, மார்ச். 20- முன்னாள் இந்தி திரையுலக கதாநாயகி ஒருவர்,சிகிச்சைக்கு பணமில்லாமல், சாப்பிடக் கூட பணமில்லாமல் மருத்துவமனையில் தவித்து வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சல்மான் கானுடன்  'வீராகதி' என்ற திரைப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் பூஜா தட்வால். தனது குடும்பத்துடன் கோவாவில் வசித்து வந்த இவருக்கு, நுரையீரல் தொடர்பான நோய் எற்பட்டுள்ளதுபின்னர் அது காசநோய் என்று தெரியவந்ததும், அணமையில்  மும்பையில் உள்ள மருத்தவமனை ஒன்றில் பூஜா சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமானதை அறிந்து, பூஜாவின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

அதன் பின்னர், சாப்பிடக் கூட பணமில்லாமல் தவித்த பூஜாவிற்கு, மருத்துவமனையில் உள்ள சிலர் உதவி செய்துள்ளனர்இந்நிலையில், தன்னுடன் நடித்த சல்மான்கானிடம் உதவி கேட்க பூஜா தொடர்பு கொள்ள நினைத்து முடியாமல் போனது. எனவே, தனது நிலையை வீடியோவாக பதிவு செய்து, தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து,சல்மான்கான் மற்றும் இந்தி ஊடகங்களுக்கு பூஜா அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து பூஜா கூறுகையில், 'சினிமாவில் இருந்து விலகியதும் கோவாவில் கேசினோ ஒன்றை கடந்த சில ஆண்டுகளாக நிர்வகித்து வந்தேன்.  ஆறு மாதங்களுக்கு முன்பே, எனக்கு காசநோய் தீவிரமடைந்து விட்டது என்பது தெரிந்தது.' 

'என்னிடம் மருந்து வாங்க கூட பணமில்லை, இதனால் சல்மான்கானிடம் உதவி பெற முயற்சி செய்தேன்.  அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.  என் வீடியோவை பார்த்தால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என நம்புகிறேன்' என்று பூஜா தெரிவித்துள்ளார்

BLOG COMMENTS POWERED BY DISQUS