கோலாலம்பூர், செப்.15- இதுவரை தனியார் முறையில் இரு நாடுகளுக்கிடையிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கங்களுக்கும் இடையில் அதிகாரப்பூர்வமான உடன்படிக்கை கையெழுத்திட்டப்பட்டது.

இதில் கையெழுத்திட தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தையும் பிரதிநித்து தமிழ்நாட்டிலிருந்து நடிகர் விஷால் வருகைப் புரிந்தார்.

இந்திய திரைப்பட கலைஞர்களும் மலேசிய கலைஞர்களுக்கும் இடையிலான உறவு பாலத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் சில கோரிக்கைகள் விஷாலிடம் முன் வைக்கப்பட்டது. மலேசிய திரைப்பட நிறுவனங்களின் திரைப்படங்களை இந்தியாவில் திரையிட மற்றும் மலேசிய கலைஞர்களிடம் உள்ள நல்ல கதையை படமாக்க நாங்கள் தயார் என்று விஷால் கூறினார்.

இந்த வருட இறுதியில் இரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் கூட்டுமுயற்சியில் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் திரட்டப்படும் நிதியில் ஒரு பங்கினை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரமணா தெரிவித்தார். இந்த திட்டம் மலேசியாவின் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சின் ஆதரவுடன் நடக்கும் என விஷால் கூறினார்.

இதே நிகழ்ச்சியில் துப்பறிவாளன் திரைப்படத்தின் அறிமுக விழாவும் நடைப்பெற்றது. இதில் நடிகர் வினய் மற்றும் ரமணா கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை மாலிக் ஸ்திரிம் காப்பிரேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

கோலாலம்பூர், செப்.8- மலேசிய இயக்குனர் கார்த்திக் சியாமளன் இயக்கத்தில் இம்மாத இறுதியில் வெளிவரவிருக்கிறது என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படம். இப்படத்தின் புதிய டிரைலர் இன்று காலையில் முகநூலில் வெளியிடப்பட்டது.

'மெல்லத் திறந்தது கதவு' என்ற மலேசியத் தமிழ்த் திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கிய இயக்குனரான கார்த்திக் சியாமளனின் அடுத்த படம் தான் என் வீட்டுத் தோட்டத்தில் படம். இரண்டு வருடங்களுக்கு முன்னமே இந்தப் படம் தயாராகி விட்டாலும், இம்மாத இறுதியில் தான் மலேசியா எங்கும் திரைக் காணவிருக்கிறது. 

தியேட்டருக்கு வரும்முன்னமே இப்படம் நல்ல விமர்சனங்களையும் பல விருது நிகழ்ச்சிகளுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'என் வீட்டுத் தோட்டத்தில்' படத்தினைப் பற்றி இயக்குனர் கார்த்திக் சியாமளனும் கதாநாயகி ஜெயா கணேசனும் கடந்தாண்டு வணக்கம் மலேசியாவிற்கு வழங்கிய சிறப்புப் பேட்டி இதோ:

 

கோலாலம்பூர், ஆக. 31- தலைநகரில் இன்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் "ஒன் ஆர்ட்" இசைக்கச்சேரி ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா மிக கோலாகலமாக கேஎல்சிசியில் அமைந்துள்ள திரையரங்கில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான ஏ.ஆர்.ரஹ்மானின் மலேசிய ரசிகர்கள் அவரின் வருகைக்காக காத்திருக்க பாடகர் ஹரிச்சரன், ரஞ்சித் பேரத் ஆகியோர் உடன் வட, ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைத்துறை வரலாற்றில் முதன் முறையாக அவரின் அனைத்து இசைக்கச்சேரியின் இனிமையான தருணங்கள் இப்படத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவில் இப்படத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் ஏ.ஆர் ரஹ்மான் அறக்கட்டளைக்கு வழங்கப்படவிருக்கின்றது. அவரோடு இசைக்கச்சேரிகளில் உடன் வேலை செய்த இசைக்கலைஞர்களும் மற்றும் உலகின் சிறந்த இசைக்கலைஞர்கள் சிலரும் ஏ.ஆர் ரஹ்மானுடன் வேலை செய்த தங்களின் அனுபவங்களை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துக்கொண்டதோடு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல பாடல்களையும் பாடியிருந்தனர்.

சென்னை,ஆக.18- நடிகர் 'அல்வா' வாசுவின் ஆசை நிராசையாகிவிட்டது. 900 படங்களுக்கு மேல் நடித்தவர் வாசு. 'அமைதிப் படை' படத்தில் சத்தியராஜூக்கு அல்வா வாங்கிக் கொடுத்த காட்சியில் நடித்த பிறகு அல்வா வாசுவாகிவிட்டார்.

வடிவேலு காமெடி குழுவில் முக்கிய ஆளாக இருந்தார். வடிவேலு காமெடியில் அசத்தினாலும் அல்வா வாசு தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை தன்னையும் கவனிக்க வைத்தார்.

மதுரையை சேர்ந்த  வாசு, இசையமைப்பாளர் ஆகும் ஆசையுடன் தான் சென்னை வந்தார். ஆனால் இசை பக்கம் போக முடியாமல் உதவி இயக்குனரான அவர் நகைச்சுவை நடிகரானார். மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தார். 

மணிவண்ணனுக்கு முகவும் பிடித்த நபராக இருந்தவர் 'அல்வா' வாசு. என்றாவது ஒரு நாள் நான் இயக்குனர் ஆவேன் என்ற ஆசையை சுமந்து கொண்டு வாழ்க்கையே ஒட்டியவர். கடைசி வரை இயக்குனர் ஆகும் ஆசை நிறைவேறாமலேயே விண்ணுலகம் சென்றுவிட்டார்.

More Articles ...