தனுஷ், கஜோல் கோலாலம்பூரில்.. ரசிகர்களுடன் சந்திப்பு!

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், ஜூலை.27- விஐபி 2 திரைப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அதில் நடித்த முன்னணி நடிகர்களாகிய தனுஷ், கஜோல் ஆகியோர் மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ளனர். அவர்கள் இருவரும் இன்று மாலை மஸ்ஜிட் இந்தியாவில் ரசிகர்களைச் சந்திக்கவிருக்கின்றனர்.

இன்று மாலை 6 மணிக்குக் கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள ஜேக்கல் பேரங்காடிக்கு முன் ரசிகர்கள் மத்தியில் தனுசும் கஜோலும் தோன்றுவர் என மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மலேசிய ரசிகர்கள் கலந்து கொண்டு VIP 2- இன் நட்சத்திரங்களுடன் நேரடியாக பேசலாம் என மாலிக் ஸ்ட்ரீம்ஸ் புரோடக்‌ஷன்ஸ் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS