பாடித் திரிந்த கானக் குயில் ராஜராஜ சோழனின் இறுதிப் பயணம்! (VIDEO)

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், ஜூலை.27- 'மலேசியாவின் சீர்காழி' என்று போற்றப்பட்ட, பாடகர் ராஜராஜ சோழனுக்கு இன்று இறுதிச் சடங்கு நடந்தேறியது. இத்தனைக் காலம் தனது கானக் குரலால் தங்களைச் சந்தோசப்படுத்திய பாடகனுக்கு கலைஞர்களும் பொதுமக்களும் இறுதி அஞ்சலி நடத்தினர். 

நேற்று முன்தினம் மாலை, மாரடைப்பால் மரணமடைந்த அன்னாருக்கு இன்று ஷா ஆலாமில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடந்தது. காலை 10 மணிக்கு நடந்த இறுதிச் சடங்கில் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட நம் நாட்டு கலைஞர்களும் கலந்து கொண்டு தங்களின் மூத்த கலைஞருக்கு இறுதி மரியாதைச் செலுத்தினர். 

தனது பெயருக்கு ஏற்பவே கம்பீரமான தோற்றம் கொண்ட இவர், பிரபல தமிழகப் பாடகர் இறவா புகழ்மிக்க சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அச்சு அசலாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேடைகள்தோறும் பாடி வந்தார்.

கேட்போர் கண்களில் கண்ணீர் ததும்ப செய்யும்,  இவரின் குரலில் நாடெங்கும் ஒலித்த, "நல்லத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது" எனும் பாடல் அன்னாருக்கே சமர்ப்பணமாகும். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS