ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பயண ஆவணப்படம்; கோலாலம்பூரில் சிறப்புக் காட்சி! (VIDEO)

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், ஆக. 31- தலைநகரில் இன்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் "ஒன் ஆர்ட்" இசைக்கச்சேரி ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா மிக கோலாகலமாக கேஎல்சிசியில் அமைந்துள்ள திரையரங்கில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான ஏ.ஆர்.ரஹ்மானின் மலேசிய ரசிகர்கள் அவரின் வருகைக்காக காத்திருக்க பாடகர் ஹரிச்சரன், ரஞ்சித் பேரத் ஆகியோர் உடன் வட, ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைத்துறை வரலாற்றில் முதன் முறையாக அவரின் அனைத்து இசைக்கச்சேரியின் இனிமையான தருணங்கள் இப்படத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவில் இப்படத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் ஏ.ஆர் ரஹ்மான் அறக்கட்டளைக்கு வழங்கப்படவிருக்கின்றது. அவரோடு இசைக்கச்சேரிகளில் உடன் வேலை செய்த இசைக்கலைஞர்களும் மற்றும் உலகின் சிறந்த இசைக்கலைஞர்கள் சிலரும் ஏ.ஆர் ரஹ்மானுடன் வேலை செய்த தங்களின் அனுபவங்களை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துக்கொண்டதோடு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல பாடல்களையும் பாடியிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS