மலேசியக் கலைஞர்களின் கதையைப் படமாக்க நாங்கள் தயார்- நடிகர் விஷால் (VIDEO)

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், செப்.15- இதுவரை தனியார் முறையில் இரு நாடுகளுக்கிடையிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கங்களுக்கும் இடையில் அதிகாரப்பூர்வமான உடன்படிக்கை கையெழுத்திட்டப்பட்டது.

இதில் கையெழுத்திட தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தையும் பிரதிநித்து தமிழ்நாட்டிலிருந்து நடிகர் விஷால் வருகைப் புரிந்தார்.

இந்திய திரைப்பட கலைஞர்களும் மலேசிய கலைஞர்களுக்கும் இடையிலான உறவு பாலத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் சில கோரிக்கைகள் விஷாலிடம் முன் வைக்கப்பட்டது. மலேசிய திரைப்பட நிறுவனங்களின் திரைப்படங்களை இந்தியாவில் திரையிட மற்றும் மலேசிய கலைஞர்களிடம் உள்ள நல்ல கதையை படமாக்க நாங்கள் தயார் என்று விஷால் கூறினார்.

இந்த வருட இறுதியில் இரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் கூட்டுமுயற்சியில் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் திரட்டப்படும் நிதியில் ஒரு பங்கினை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரமணா தெரிவித்தார். இந்த திட்டம் மலேசியாவின் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சின் ஆதரவுடன் நடக்கும் என விஷால் கூறினார்.

இதே நிகழ்ச்சியில் துப்பறிவாளன் திரைப்படத்தின் அறிமுக விழாவும் நடைப்பெற்றது. இதில் நடிகர் வினய் மற்றும் ரமணா கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை மாலிக் ஸ்திரிம் காப்பிரேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS