நடிகை சங்கீதாவிற்கு மேலும் ஒரு விருது! இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறார்!

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், அக்.4- 29-ஆவது மலேசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகை பட்டத்தை வென்ற குதூகலத்தில் இருந்த மலேசிய நடிகை சங்கீதா கிருஷ்ணசாமிக்கு மேலும் ஓர் இனிப்பான செய்தி.., நேற்று நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் கோலாலம்பூர் திரை விமர்சகர்கள் விருது நிகழ்வில், சிறந்த நடிகையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

‘Adiwiraku’ என்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் ஷெரில் ஆன் பெர்னாண்டோ என்ற ஆங்கில மொழி ஆசிரியையாக நடித்து மலேசிய மக்களின் இதயத்தில் இடம் பெற்ற அவர், அவ்விருதை பெறுவதில் தாம் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அடைந்திருந்திருப்பதாக கூறினார். அத்திரைப் படம் எரிக் ஓங் இயக்கத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதினை நான் வென்றுள்ளேன் என்று எனது நண்பர் கூறும் வரையில், இது குறித்து எவ்வித தகவலும் எனக்குத் தெரியாது’ என அவர் கூறினார். 

அந்த விருதினை பெற்றுக் கொண்ட சங்கீதா, அதனை அத்திரைப் படத் தயாரிப்பாளர் ஜேசன் சோங், இயக்குநர் ஓங், திரைப்படக் குழுவினர் மற்றும் சுங்கைப் பட்டாணி பினாங் துங்கால் இடைநிலைப் பள்ளி மற்றும் ஆசிரியை பெர்னாண்டோ ஆகியோருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். 

மலேசிய திரைப்பட இயக்குநர்கள், இவ்வகையான உத்வேகத்தை தூண்டும்,உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை மேலும் உருவாக்க வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS