உள்ளூர் நடிகை நித்தியா மனோகரன் மரணம்; கலையுலகம் அதிர்ச்சி!

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், டிச.23- பல மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சிப் படங்களிலும் நடித்த உள்ளூர் நடிகை நித்தியா மனோகரன் டெங்கி காய்ச்சல் காரணமாக நேற்று மரணமடைந்தார்.

நடிப்பின் மீதான ஆர்வத்தால் பல உள்ளூர் மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சி படங்களிலும் சிறப்பாக நடித்து வளர்ந்து வரும் இளம் கலைஞர் என புகழ்பெற்றவர் நித்தியா மனோகரன். அண்மையில் ஒளிப்பரப்பான தாமரை தொலைக்காட்சி படத்தில் அவர் நடித்த பாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. 

மேலும், இயக்குனர் சூரியா ரவிகுமார் இயக்கத்தில் உருவான என்ன செய்ய போகிறாய் என்ற மேடை நாடகத்திலும் நித்தியா மனோகரன் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நித்தியா அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு நித்தியா சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு கிள்ளான், தெலுக் பூலாய்யில் உள்ள அவரின் வீட்டில் அன்னாரில் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நடிகையான நித்தியாவின் மரணம் மலேசிய கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS