காசிம் பேரவை; கூண்டோடு வெளியேறிய இயக்கங்கள்; ஆர்.ஓ.எஸ் பதிலுக்காக காத்திருப்பு!

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், பிப்.28- மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவையிலிருந்து (காசிம்) விலகுவதாக 11 இயக்கங்கள் அறிவித்த வேளை ஆர்.ஓ.எஸ் எனும் பதிவு இலாகாவின் அடுத்த நடவடிக்கைகாக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டிலுள்ள கலைஞர்களையும் அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் உருவாக்க பட்ட காசிமில் முறைகேடுகளும் அதன் தலைவர் விஜய் எமெர்ஜென்சி வெளிப்படைத் தன்மை இன்றி செயல்படுவதாகவும் கூறி சுமார் 11 இயக்கங்களின் தலைவர்கள் காசிமிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

இதுப்பற்றி பேசிய எம்.சிவா, "காசிம் பேரவையில் பல்வேறு மோசடிகள், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் அது குறித்து நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கேள்வியெழுப்பினோம். ஆனால், எங்களின் புகார்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தேசிய சங்கப் பதிவிலாகாவில் (ஆர்.ஓ.எஸ்) இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எங்களது புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அது அதன் இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு தரப்புகளும் அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

நேற்று நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் டி.எச்.ஆர்.ராகா அறிவிப்பாளர் மாறன், இயக்குனர் எஸ்.டி. பாலா, இயக்குனர் திவாகர் சுப்பையா, இசையமைப்பாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS