'மலேசியாவில் படப்பிடிப்பு நடந்துங்கள்' - இந்திய திரைத்துறையினருக்கு பிரதமர் அழைப்பு!

மலேசியச் சினிமா
Typography

புதுடெல்லி, ஏப்ரல் 4- மலேசியாவில் இந்திய திரைப்படங்களுக்கான ஆதரவு பெருமளவில் காணப்படுகின்றது. ஆதலால், தமிழ் மற்றும் இந்தி திரையுலகத்திலிருந்து மேலும் பல திரைப்படங்களையும் நாடகங்களையும் மலேசியாவில் எடுப்பதற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார் மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ராசாக்.

இந்தியத் திரைப்படங்களின் மிகப் பெரிய ரசிகன் நான் என்று இந்தியா சென்றுள்ள பிரதமர் நஜீப் கூறினார். இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் மலேசியாவின் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்காட்சி, கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை போன்றவற்றை மேம்படுத்தி கூறலாம் என்றும் தெரிவித்தார். மேலும், அந்தக் கலை இரவில் இந்திய திரைப்படக் குழுவினருக்கு மலேசியா பல சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்திய சினிமாத் துறை உலகிலேயே மிகப்பெரிய சினிமாத் துறையாகக் கருதப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1,500 முதல் 2,000 திரைப்படங்கள் வரை வெளியிடப்படுகின்றன.

இதன்வழி, இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் வலியுறுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS