கோலாலம்பூர், ஆக. 31- தலைநகரில் இன்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் "ஒன் ஆர்ட்" இசைக்கச்சேரி ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா மிக கோலாகலமாக கேஎல்சிசியில் அமைந்துள்ள திரையரங்கில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான ஏ.ஆர்.ரஹ்மானின் மலேசிய ரசிகர்கள் அவரின் வருகைக்காக காத்திருக்க பாடகர் ஹரிச்சரன், ரஞ்சித் பேரத் ஆகியோர் உடன் வட, ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைத்துறை வரலாற்றில் முதன் முறையாக அவரின் அனைத்து இசைக்கச்சேரியின் இனிமையான தருணங்கள் இப்படத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவில் இப்படத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் ஏ.ஆர் ரஹ்மான் அறக்கட்டளைக்கு வழங்கப்படவிருக்கின்றது. அவரோடு இசைக்கச்சேரிகளில் உடன் வேலை செய்த இசைக்கலைஞர்களும் மற்றும் உலகின் சிறந்த இசைக்கலைஞர்கள் சிலரும் ஏ.ஆர் ரஹ்மானுடன் வேலை செய்த தங்களின் அனுபவங்களை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துக்கொண்டதோடு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல பாடல்களையும் பாடியிருந்தனர்.

சென்னை,ஆக.18- நடிகர் 'அல்வா' வாசுவின் ஆசை நிராசையாகிவிட்டது. 900 படங்களுக்கு மேல் நடித்தவர் வாசு. 'அமைதிப் படை' படத்தில் சத்தியராஜூக்கு அல்வா வாங்கிக் கொடுத்த காட்சியில் நடித்த பிறகு அல்வா வாசுவாகிவிட்டார்.

வடிவேலு காமெடி குழுவில் முக்கிய ஆளாக இருந்தார். வடிவேலு காமெடியில் அசத்தினாலும் அல்வா வாசு தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை தன்னையும் கவனிக்க வைத்தார்.

மதுரையை சேர்ந்த  வாசு, இசையமைப்பாளர் ஆகும் ஆசையுடன் தான் சென்னை வந்தார். ஆனால் இசை பக்கம் போக முடியாமல் உதவி இயக்குனரான அவர் நகைச்சுவை நடிகரானார். மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தார். 

மணிவண்ணனுக்கு முகவும் பிடித்த நபராக இருந்தவர் 'அல்வா' வாசு. என்றாவது ஒரு நாள் நான் இயக்குனர் ஆவேன் என்ற ஆசையை சுமந்து கொண்டு வாழ்க்கையே ஒட்டியவர். கடைசி வரை இயக்குனர் ஆகும் ஆசை நிறைவேறாமலேயே விண்ணுலகம் சென்றுவிட்டார்.

கோலாலம்பூர், ஆக.10- 'அனாபெல்' திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது 'ஹிஸ்டீரியா'விற்கு உள்ளான பெண்ணொருவர் திடீரென்று அலறியடித்து கத்திக் கூச்சலிட்டு திரையரங்கையே கதிகலங்க வைத்தார். 

அனாபெல் கிரியேஷன் என்ற அந்த திகிலூட்டும் ஆங்கில பேய் படம் நேற்று மலேசிய திரையரங்குகளில் முதல் காட்சியாக ஒளியேறியது. இந்நிலையில், அந்தப் படத்தைப் பார்க்க வந்த ஓர் இளம் பெண் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று கத்தி கூச்சலிட்டு திரையரங்கத்தையே பீதிக்கு உள்ளாக்கினார்.

இந்நிலையில் ஓடிக்கொண்டிருந்த படம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதில் முதலுதவிக் குழு ஈடுபட்டது.

இதனிடையே, இச்சம்பவத்தை குறித்து முகநூல் பக்கத்தில் ஒரு நபர் கீழ் கூறியுள்ளார்:

"நான் F-11 இருக்கையில் அமர்ந்திருந்தேன் அந்தப் பெண்  E-9 இருக்கையில் அமர்ந்திருந்தார் .எனக்கும் அவருக்கும் தூரம் அதிகம் இல்லை. அவர் திரையரங்கினுள் நுழைந்ததிலிருந்தே நான் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.

அந்தப் பெண் வந்ததிலிருந்தே ஏதோ கால் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது போலக் காணப்பட்டார்.. இதனிடையே, திரையரங்கின் குளிரும் அளவுக்கு மீறி போனதால் அந்தப் பெண் கால் வலியால் துடித்துப் போனார். அதனால் தான் அவர் அலறினார் என்று கூறுகின்றார்.

கோலாலம்பூர், ஜூலை.27- 'மலேசியாவின் சீர்காழி' என்று போற்றப்பட்ட, பாடகர் ராஜராஜ சோழனுக்கு இன்று இறுதிச் சடங்கு நடந்தேறியது. இத்தனைக் காலம் தனது கானக் குரலால் தங்களைச் சந்தோசப்படுத்திய பாடகனுக்கு கலைஞர்களும் பொதுமக்களும் இறுதி அஞ்சலி நடத்தினர். 

நேற்று முன்தினம் மாலை, மாரடைப்பால் மரணமடைந்த அன்னாருக்கு இன்று ஷா ஆலாமில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடந்தது. காலை 10 மணிக்கு நடந்த இறுதிச் சடங்கில் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட நம் நாட்டு கலைஞர்களும் கலந்து கொண்டு தங்களின் மூத்த கலைஞருக்கு இறுதி மரியாதைச் செலுத்தினர். 

தனது பெயருக்கு ஏற்பவே கம்பீரமான தோற்றம் கொண்ட இவர், பிரபல தமிழகப் பாடகர் இறவா புகழ்மிக்க சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அச்சு அசலாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேடைகள்தோறும் பாடி வந்தார்.

கேட்போர் கண்களில் கண்ணீர் ததும்ப செய்யும்,  இவரின் குரலில் நாடெங்கும் ஒலித்த, "நல்லத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது" எனும் பாடல் அன்னாருக்கே சமர்ப்பணமாகும். 

 

More Articles ...