கோலாலம்பூர், ஜன.19- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார் பிரபல மலேசிய பாடகர் டாக்டர் பெர்ன் (Dr.Burn). ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக இளைஞர்களுக்கு இப்பாடல் உந்துதலாக அமைவதாக உள்ளது.

'Save Jallikattu' என்று தலைப்பிடப்பட்ட இந்த பாடலை பெர்ன் தனது யூடியூப் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 11,000க்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். அதோடு, பலர் தங்களது சமூக வலைத்தளங்களிலும் அதனைப் பகிர்ந்து வருகின்றனர். 

 

சொல்லிசை தலைவன் என அழைக்கப்படும் பெர்ன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடலை வெளியிடும் நிலையில் புதிய பாடல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெளியிட்டது மலேசிய ரசிகர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்களையும் உற்சாக மூட்டியுள்ளது.

தனது பாடலில் பெர்ன் பல உற்சாகமான வாக்கியங்களை இணைத்துள்ளார். அதனைப் பலர் பாராட்டியும் உள்ளனர். அதில் சில, "காங்கேயன் சீறிப் பாய்கிறான் தடுக்க யாரு?, நீ மாடு என கருதும் மிருகம் எங்கள் குலத் தெய்வம் வந்து பாரு.., எங்கள் இனம் காக்கும் திமீர் இது அடங்காது.. போன்ற வாசகங்கள் பலரை ஈர்த்துள்ளது.

கோலாலம்பூர், ஜன.18- மலேசியத் திரைப்படமான தெமுவான் தக்டிர் (Temuan Takdir) படம் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருது விழாவில் இரு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. அப்படத்தை இயக்கிய டையன் விமல் சிறந்த புதுமுக இயக்குனர் விருதினை வென்றார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருது விழா உலகளவில் திரைப்பட உருவாக்கத்திற்கு முக்கிய அங்கீகாரம் வழங்கும் விழாவாக கருதப்படுகிறது. 

 

கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த விருது விழாவில் தெமுவான் தக்டிர் எனும் மலாய் படம் சிறந்த புதுமுக இயக்குனர் விருதினையும் சிறந்த பின்னணி இசைக்கான விருதினையும் வென்றது. சிறந்த பின்னணி இசைக்கான விருதினை கிரிஷ்ந்தன் ஷண்முகம் வென்றார். 

இப்படம் இதற்கு முன்னர் பல விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சாண்டலெர் திரைப்பட விழாவில் சிறந்த புதுமுக இயக்குனர் விருது விமலுக்கு கிடைத்தது பெருமைக்குரிய விசயமாகும்.

உலகளவில் சிறந்த விமர்சனங்களைப் பெற்று வரும் இத்திரைப்படத்தை விமல் இயக்கியது மட்டுமின்றி தயாரித்தும் முக்கிய பாத்திரத்தில் நடிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோலாலம்பூர், நவ.9- அன்று.. 'எங்க ரப்பர் எஸ்டேட் வாழ்க்கை பத்தி புத்தகத்துலயும் பேப்பர்லயும் வந்திருக்கு' என்று மகிழ்ச்சி கொண்டவர்கள் சிலர்..! இன்று.. 'தியேட்டர்ல ஓடுன படத்துல அந்த பையன் போட்டிருந்தானே சட்டை, அதே மாதிரி தான் நானும் அந்த காலத்துல போட்டேன் டா' என்று சந்தோசப்படுபவர்கள் பலர்..!

அன்று புத்தகங்களுக்கு பிறகு, இன்று திரைப்படங்கள் மக்களின் சமகால வாழ்க்கையினை வெளியுலகுக்கு காட்டும் முக்கிய தளமாக விளங்குகின்றன. அண்மைய காலமாக மலேசியாவில் இந்தியர்களின் வாழ்வியலை அடையாளப்படுத்தும் முக்கியமானதொரு பணியை தமிழ்த்திரைப்படங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், இன்னமும் திரைப்படங்களுக்கான அங்கீகாரமும் வசூலும் கிடைக்கவில்லை என்ற குறைப்பாடு நிலவி வருகிறது. 

 

திரைப்படங்களுக்கு எது முக்கியம்? வசூலா அல்லது அங்கீகாரமா? இதனைப் பற்றி இன்றைய இளம் பெண் இயக்குனரும் கீதையின் ராதை மலேசியத் திரைப்படத்தின் இயக்குனருமான ஷாலினி பாலசுந்தரத்திடம் கேட்டபோது, இரண்டும் அவசியம் என கூறினார்.

திரைப்படத்தின் வெற்றி என்பது வசூலையும் பின்னர் அதன் மீது வழங்கப்பட்ட அங்கீகாரத்தையும் சார்ந்தது என அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ஷாலினியிடம் மலேசியத் தமிழ்த்திரைப்படங்களில் சமூக கருத்துகள் அவசியமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. அதற்கான பதிலும் மேலே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் இடம் பெற்றுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5-  நாட்டின் பிரபல  மலாய் நடிகர் டத்தோ ஜலாலுடின் ஹஸானின் துணைவியார், டத்தின் ஹஷிமா மாட் எஹ்சான் இன்று காலை 3 மணியளவில் காலமானார். 

கடந்த வெள்ளிக்கிழமை யு.கே.எம் மருத்துவமனையில் செய்துகொண்ட  அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் நிலை மேலும் மோசமானதைத் தொடர்ந்து,  64 வயதான  ஹஷிமா  இன்று அதிகாலையில் இறுதி மூச்சை விட்டதாக ஜலாலுடின் ஹசான் தெரிவித்தார். 

இதய வால்வில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர  ஹஷிமாவிற்கு நீரிழிவு மற்றும் நுரையீரல் பிரச்சனையும் இருந்து வந்ததாகவும் டத்தோ ஜலாலுடின் ஹசான் தெரிவித்தார். 

அவரது நல்லுடல் இன்று மாலை  டத்தோ கெராமாட் முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படும். கடந்த  1976-ஆம் ஆண்டு திருமணம் புரிந்த டத்தோ ஜலாலுடின் ஹசான்- ஹஷிமா தம்பதிக்கு 8 பிள்ளைகளும், 14 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.  

More Articles ...