கடந்த 1994ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் வெளிவந்த சீனக்குழுவினர் பாடும் தமிழ்ப் பாடல் காட்சி மிகப் பெரிய அளவில், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது.

“பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வம் அன்றோ” என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பாடலை சீன மாணவிகளின் குழு ஒன்று பாடி, அதற்கு ஏற்ப கலாசார உடையில் ஆடிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில்  ‘வைரல்’ ஆகி சக்கை போடு போடுகிறது. 

 

கோலாலம்பூர், ஏப்ரல் 15- மலேசிய உள்நாட்டுத் திரைப் படங்களின் பொற்காலம் மலர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். தற்போது, பல  படங்கள் தயாரிப்பில் உள்ளன. 

அதேவேளையில், தயாரிப்புப் பணிகள் முடிந்து சில படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. அந்த வகையில், மேலும் ஒரு உள்நாட்டுப் புது வரவாக அமைந்திருக்கிறது 'கீதையின் ராதை'. இது, முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரின் மற்றொரு கலை முயற்சி எனக் கருதலாம்.

இப்படத்தின் இளம் இயக்குனராக திரையுலகில் முத்திரைப் பதிக்கிறார் ஷாலினி பாலசுந்தரம். பிரசித்தி பெற்ற லிம் கோக் விங் பல்கலைக்கழகத் தில் 'பல்லூடக படைப்பியல் கலைத் துறை'யில் பட்டம் பெற்றவர் இவர்.

கீதையின் ராதை படத்தை இயக்கியிருப்பதோடு, அவரே இதில் நாயகியாகவும் நடிப்பை வழங்கியுள்ளார். இவர் ஏற்கெனவே 'இணை' என்ற குறும் படம் ஒன்றையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீதையின் ராதை பற்றி 'வணக்கம் மலேசியா' செய்தித் தளத்துடன் தமது கருத்தைப் பகிர்ந்து கொண்ட ஷாலினி,  "இதுவொரு காமெடி கலந்த காதல் கதை. மலேசியக் கலாசாரப் பின்னணியில் இந்தக் காதல் காமெடியின் சூழல்கள் அமைந்திருக்கின்றன" என்றார்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடு அதில் கதாநாயகியாகவும் நடித்திருப்பது பற்றியும் அவர் விவரித்தார். "இது, எனக்கு சற்று எளிதாகவே அமைந்தது. ஓர் இயக்குனர் என்ற முறையில் நான் நினைத்ததைப் படைப்பாக்க, நானே நடித்தது எனக்கு உதவியது" என்று அவர் சொன் னார். இந்தப் படத்தில் கதாநாயகனாக கர்ணன் கிராக் நடித்திருக்கிறார். அவருடன் விக்ரன், சுவர்ணா ஆகியோரும் முக்கிய பாத்தி ரங்களில் நடித் துள்ளனர். 

மலேசிய ரசிகர்களைக் கீதையின் ராதை பெரிதும் கவரும் என்று தாம் நம்புவதாகக் கூறுகிறார் ஷாலினி. 'இது எப்போது திரைக்கு வரும்?' என்று கேட்ட போது, 'ஜூலையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்' என்று சொன்னார். எனினும், படம் வெளியீடு காணும் தேதியை அவர் தெரிவிக் கவில்லை.

 

உள்நாட்டுத் தமிழ்த் திரைப்படங்களின் வரவுகளுக்கான வசந்த காலம் இது. அடுத்தடுத்து படங்கள் வெளியீடுகளுக்காக வரிசை பிடித்து நிற்கும் வேளையில், "என் வீட்டுத் தோட்டத்தில்...' மே மாதம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

 

'மெல்லத் திறந்தது கதவு' என்ற மலேசியத் தமிழ்த் திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கிய இயக்குனரான கார்த்திக் சியாமளன், என் வீட்டுத் தோட்டத்தில் படத்தையும் இயக்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'என் வீட்டுத் தோட்டத்தில்' ஒரு வித்தியாசமாக படம் என்கிறார் கார்த்திக் சியாமளன். நம்மிடையே திகில் படங்கள் அதிகம் இல்லை. அப்படியொரு படத்தை மிகக்குறைந்த பட்ஜெட்டில் உயர்ந்தபட்சத் திகிலுடன் ஒரு படத்தைத் தர வேண்டும் என்ற எனது ஆசை இதில் நிறைவேறியிருக்கிறது என்று அவர் கூறுகிறார். 

 

'என் வீட்டுத் தோட்டத்தில்' படம் உருவான விதம் பற்றி இயக்குனர் கார்த்திக் சியாமளனின் காணொளி நேர்காணலை இங்கே காணலாம்.

 

 

தமிழ் திரையுலகில், “பஞ்ச் டயலாக்என்றாலே அது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தான். இவர் சமீபத்தில் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் தான் கபாலி. இந்த படத்தில், அவர் அனைத்துலக தாதாவாக நடிக் கிறார்

 

மேலும் குழந்தைகளுக்காக ஆசிரமம் நடத்தி வரும் இவரை எதிரிகள் சீண்ட மறுபடியும் கபாலி அவதாரம் எடுக்கிறார் என்பதுதான் கபாலி படத்தின் கதை

 

பஞ்ச் டயலாக்கின் கிங்என ரஜினி கூறப்பட்டாலும் இவர் இப்படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் பேசவில்லை. ஆனால் படத்தில் இவர் பேசும் வசனங்கள் மிகவும் அழுத்தமானவை என்று கூறுகின்றனர்.

 

மேலும்,ஆக்‌ஷன் காட்சிகளில் ரஜினியின் நடிப்பைக் கண்டு தாம் வியப்பதாக இப்படத்தில் நடிக்கும் பிரபல பாலிவூட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

 

 

More Articles ...