கோலாலம்பூர், மார்ச் 21- நாடு தழுவிய அளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியஒலா போலாதிரைப்படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் 21 வயதுடைய மாணவரான சரண்குமார்.

மலேசியாவின் முன்னாள் தேசிய கால்பந்து வீரரான கோல்கீப்பர் ஆறுமுகத்தை பிரதிபிம்பமாக, கோல்கீப்பர் முத்து என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் சரண்குமார்.

சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் எனக்கு இருந்தது கிடையாது. எதேச்சையாக அப்படியொரு வாய்ப்புக் கிடைத்ததுஎன்று கூறுகிறார் சரண்குமார்.

 

எனது படிப்பைக் கொஞ்ச காலம் நிறுத்திவைத்து விட்டுத்தான் படத்தில் நடித்தேன். அதிலும் கோல்கீப்பராக நடிப்பதற்கு தொடக்கத்தில் பெரும் சிரமப்பட்டேன்என்கிறார் சரண்குமார்மாணவர் சரண்குமார், தம்முடைய சினிமா அனுபவத்தை நமதுவணக்கம் மலேசியாஇணையத் தமிழ்த் தினசரியுடன் பகிர்ந்து கொண்டார். அந்தக் காணொளியை இங்கே காணலாம்…. 

கோலாலம்பூர், மார்ச் 7- வரும் மார்ச் 15ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட மயங்காதே மலேசியத் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் ரவிந்திரன் நேற்று தெரிவித்தார்.

சி.குமரேசன் இயக்கத்தில் உருவான மயங்காதே படத்தின் சிறப்புக் காட்சி நேற்று தலைநகர் நு சென்ட்ரலில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மயங்காதே படம் திரையிடப்பட்டது. படத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதில் மயங்காதே படத்தின் சிறப்புகளைப் பற்றி இயக்குனர் சி.குமரேசன் கூறினார். இப்படம் 4 லட்ச ரிங்கிட் செலவில் படமாக்கப்பட்டதாகவும் சபா, கோலசிலாங்கூர், சைபர்ஜெயா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் சிகே கூறினார். 

இப்படத்தில் சிகே நாயகனாக நடிக்க, அவருடன் 'அன்டகவர் ராஸ்கல்ஸ்' படத்தில் நடித்த கே.கே.கண்ணா மீண்டும் இணை சேர்ந்துள்ளார். இவர்களோடு டத்தின் ஷைலா நாயர் கதாநாயகியாக நடிக்க, இரண்டாம் நாயகியாக திவ்யா நாயுடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, திரைக்குப் புதுமுகங்களாக காமெடி கிங் சாமி, டிஎச்ஆர் புகழ் சுரேஷ் மற்றும் அகிலா, ஸ்ருதி ஜெய்சங்கர், சரண் நாராயணன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய பாத்திரமாக 6 வயது சிறுமி ஒருவர் நடித்துள்ளார். 

படத்தின் தயாரிப்பாளர் ரவிந்திரன் பேசுகையில், மார்ச் 15ம் தேதி படத்தினைத் திரையிட எண்ணினோம். ஆனால் படத்திற்கான விளம்பரப் பணிகள் இன்னும் முழுமை பெறமுடியாத நிலையில் படத்தினை மார்ச் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார். அதோடு, ஊடகங்கள் உள்ளூர் தயாரிப்புகளை அதிகளவில் விளம்பரப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.