தமிழகத்தில் ஜிஎஸ்டியின் தாக்கம்: திங்கள் முதல் தியேட்டர்கள் ஸ்டிரைக்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.1- ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் மாநில அரசின் வரி விதிப்பு ஆகிய இரு வரிகளால் இனி தியேட்டர் டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் என்பதால் வரியை எதிர்த்து தியேட்டர்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளன.

வரும் திங்கட்கிழமை முதல் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் ஸ்ரைக்கில் ஈடுப்படும் என நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதனால் திரையிடப்பட்டுள்ள படங்களும் இனி திரைக்கு வரவிருக்கும் படங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதிலும், நேற்று மட்டும் தமிழ்நாட்டில் ஏழு படங்கள் வெளிவந்தன. அதில் கௌதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் படமும் ஒன்று. நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் திங்கள் முதல் தியேட்டரில் ஓடாவிட்டால் பல கோடி ரூபாய் நஷ்டமடையும் என அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான கண்ணன் கண்ணீர் விட்டு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS