காமெடியன் 'தாடி' பாலாஜி மீது மனைவி கொலை மிரட்டல் புகார்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை,4- நடிகர் ‘தாடி’ பாலாஜி மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரின் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் ‘தாடி’ பாலாஜி, தனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் 

பாலாஜியின் மனைவி நித்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எனக்கும் நடிகர் பாலாஜிக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை தினமும் சித்ரவதை செய்வார் என்று கூறியுள்ளார். 

மேலும், "அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். தினமும் நான் வேலைக்கு செல்லும் போதும் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணிப்பார். நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு குடிபோதையில் வந்து என்னைப் பற்றி பேசி அவமானப்படுத்தியுள்ளார். இது உயர் அதிகாரிகள் மத்தியில் எனக்கு அவமானமாக இருந்தது"

"மேலும் சமீபத்தில் என்னை அவர் தாக்கினார். இதனால் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் நித்யா சொல்லும்போது, நான் இது தொடர்பாக போலீசில் பலமுறை புகார் செய்தும் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருக்கிறேன் என்றார்.

தற்போது அதன் பேரில் போலீசார் ‘தாடி’பாலாஜி  மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS