பிரபல நடிகை தூக்குபோட்டு தற்கொலை!

இந்தியச் சினிமா
Typography

மும்பை, ஜூலை.19- பிரபல நடிகை பிடிஷா பெஸ்புராக் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதிஷா பெஸ்பருவா (வயது 30). 

இவர் டி.வி மற்றும் சினிமாவிலும் நடித்துள்ளார். மேலும் இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, பாடகியாகவும் வலம் வந்துள்ளார். ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஜக்கா ஜசூஸ்’ படத்திலும் நடித்திருந்தார். 

பிதிஷா, குஜராத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு, மும்பையில் கணவருடன் வசித்து வந்த பிதிஷா அண்மையில் தான் குருகிராமுக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில், பிதிஷாவின் தந்தை அவருக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. பிதிஷா போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் பிதிஷாவின் வீட்டிற்கு சென்றபோது கதவு உள்புறமாக பூட்டியிருந்தது.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பிதிஷா மின்விசிறியில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை எனவும் தகவல் வந்துள்ளது. 

பிதிஷாவுக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கணவரின் பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக பிதிஷா கூறி வந்துள்ளார். கணவரை விவாகரத்து செய்ய விரும்பிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தாரிடம் விசாரித்ததில், சில தினங்களாக அவர் நடவடிக்கை சரியில்லாமல் இருந்தது. உனக்கு எதாவது பிரச்சனையா என்று கேட்டோம், ஆனால் அவர் காரணம் எதுவும் சொல்லவில்லை என்றும் கூறினர்.

மேலும் நடிகை பிடிஷாவின் தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.இருப்பினும் அவரின் இறப்பில் மார்மம் இருப்பதாக கூறிய குடும்பத்தார்  நீதி விசாரணை வேண்டும் என கேட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS