'புரட்சிப்படை, ஆர்மி'- 'பிக்பாஸ்' ஓவியாவுக்கு திடீர் ரசிகர் மன்றங்கள்; அலறும் நெட்டிசன்கள்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.20- "நம்ம ஓவியா புள்ள சினிமால நடிச்சப்ப கூட இவ்ளோ பிரபலம் ஆகல. ஆனா, பிக் பாஸ் கமல் கூட சேர்ந்து இப்போ அவங்க உலக பூரா பேமஸ்.." இது தான் ஓவியாவின் தற்போதைய புகழ். இவருக்கு திடீர் ரசிகர் மன்றங்களும் சமூக வலைத்தளங்களில் உருவாகி விட்டன என்பது ஹைலைட்.

பிக் பாஸ் நடிகர் நடிகைகளின் உண்மை முகத்தைக் காட்டி வருகிறது. தொடக்கத்தில் ஜூலிக்கும் ஆர்த்திக்கும் மக்கள் பெரும் ஆதரவு கொடுத்த நிலையில் ஓவியாவைப் பலர் திமிர் பிடித்தவர் என்று கூட திட்டி தீர்த்தனர். ஆனால் 15 நாட்களில் நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது.

அன்று பாராட்டப்பட்ட ஜூலி இப்போது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படும் நிலையில் ஓவியாவிற்கோ சமூக வலைத்தளங்களில் பல திடீர் ரசிகர் மன்றங்கள் உருவாகி விட்டன. அவற்றிற்கு 'ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படை, ஓவியா ஆதரவு படை' ஆகியவை தான் தற்போது பிரபலம்.

முன்பு யாரையாவது கலாய்க்கவே மீம்ஸ் போடப்பட்டது மாறி, தற்போது ஓவியாவை பெரிதும் பாராட்டியே மீம்ஸ்கள் வெளிவருகின்றன.

போகிற போக்கில் பிக் பாஸ் என்று கமலை கூப்பிடுவதை விடுத்து இனி ஓவியாவை தான் கூப்பிடுவார்கள் போல. 

BLOG COMMENTS POWERED BY DISQUS