எங்கள் 'தலைவியை' நாங்கள் காப்பாத்துவோம்; ஓவியா ரசிகர்கள் ஆவேசம்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.22- காயத்ரியும், ஜூலியும், நமீதாவும் குடைச்சல் கொடுத்து வருவதால் கண் கலங்கிய ஓவியாக்கு ஆதரவு பெருகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி ஏதோ நன்றாக இருக்கும், குடும்பத்துடன் பார்க்கலாம் என்று பொதுமக்கள் பார்க்கத் தொடங்கினர். ஆனால் சீரியல்களை காட்டிலும் எத்தனை வன்மம், பொய், பித்தலாட்டம் என்று மக்கள் ஆவேசத்தில் உள்ளனர். 

இதில், ஓவியா, சிறிய வயது என்றாலும் மிகவும் பக்குவத்தோடு நியாயமாக பேசி, யார் வம்புக்கும் போகாதவர். அவரின் செயல்பாடுகளை பார்க்கும் மக்கள் அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர். அது அந்த பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண், பெண் போட்டியாளருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் ஓட்டுகளை அள்ளுவதற்காக சீன் போட்ட ஜூலியை பக்கத்தில் இருந்து கவனித்தவர் ஓவியாதான். ஆனால் அந்த நன்றி மறந்து விட்டு ஓவியாவிடம் அத்தனை புலம்பல் செய்துவிட்டு, காயத்ரியிடம் ‘பிளேட்டை’யே திருப்புகிறார் ஜூலி. இவர் விஷப்பாம்பை விட கொடியவள் என்கிறார்கள் மக்கள்.

ஓவியா எப்போது தூங்க வந்தாலும் சரி, காயத்ரி அவரை தேடி வம்பிழுத்து மிகவும் கேவலமான செயல்களை செய்கிறார். அதற்கு ‘ஜால்ரா’ அடிப்பது ஜூலி. நேற்றைய பகுதியிலும் இது போல ஓவியாவை தூங்க விடாமல் அவர் மனதை குத்தும் பாடல்களை பாடி அவரை அந்த அறையில் இருந்து வெளியேற்றினர்.

இந்நிலையில், சமீபத்தில் தாயை இழந்து ஓவியா மிகவும் மனவேதனையில் உள்ளார் என்றும் கூட பாராமல் அவரை கடித்து குதறுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இந்த மூன்று பேய்களின் குணம் எத்தகையது என்பது நன்றாகவே தெரிகிறது என மக்கள் கோபத்துடன் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். 

தூங்கும் அறையில் ஓவியாவை கண்டபடி பேசிவிட்டு அவர் ஏதாவது கூறுவதை மட்டும் ஆண் போட்டியாளர்களிடம் குறை கூறுகிறார் காயத்ரி.ஆண் போட்டியாளர்களும்  ஓவியாவிடம் விசாரிக்காமல் பெண்கள் கூறுவதையே வேத வாக்காக கருதுகின்றனர். இது எங்க போய் முடியுமோ என்று  மக்கள் அன்றாடம் கொந்தளித்து வந்தநிலையில், ஒவியாவையே குறி வைத்து இந்த வாரமும் வெளியேற்றும் பட்டியலில் ‘ஓவியா’ பேரை சேர்த்து விட்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS