ஓவியாவின் 'ஷட் அப் பண்ணுங்க'; பாடலாச்சி; யுவன் இசையில் விரைவில்.. (VIDEO)

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.22- பிக்பாஸ் போட்டியாளர் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் சொன்ன 'ஷட் அப் பண்ணுங்க' ‘என்ற வார்த்தையை பாடலாக இசையமைத்து வெளியிடப் போவதாக பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் நடிகை ஓவியா. பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளரில் ஓவியாவின் பெயரை பரிந்துரைக்க சக போட்டியாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், அவரை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று இணையதளத்தில் மக்கள் அதிக அளவில்  வாக்கு அளித்து வருகின்றனர். மேலும் சினிமா நட்சத்திரங்களும் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

   ### காணொளி: நன்றி Dinesh Entertainment

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதயில், ‘ஓவியா, ஸ்நேகன், கஞ்சா கருப்பு’ ஆகியோருக்கு இடையே நடந்த விவாதத்தின் போது ‘ஷட் அப் பண்ணுங்க’ என்று ஓவியா சொன்ன வார்த்தை  மிக பிரபலமாகியுள்ளது. அந்த வார்த்தையை வைத்து, யுவன் ஷங்கர் ராஜா பாடல் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது ஜெய், அஞ்சலி நடிக்கும் ‘பலூன்’ படத்தின் ‘ப்ரமோ’ பாடலாக வருகிறது. மேலும், இந்தப் பாடலை ஓவியாவிற்கு சமர்பிப்பதாக யுவன் கூறியுள்ளது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதற்கு முன்னோடியாக ‘என் செல்லகுட்டி ஓவியா’ என்ற பாடலை உருவாக்கி ஓவியாவிற்காக ‘தினேஷ் சேகர்’ என்ற ரசிகர்  பாடியுள்ளார். இது இணையத்தில் வைரலாக பட்டைய கிளப்பி வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS