சினிமாவையே மறக்க செய்த பிக்பாஸ்!  எரிச்சலில் முன்னணி நடிகர்கள்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஆக.8- சினிமாவைப் பொறுத்தவரை எப்போதும் ஊடக செய்திகளில் தொடர்ந்து பிரபலமாக இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பு. இது தெரிந்து தான் நடிகர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக ஜாலியாக இருந்தாலும் ரசிகர்களை மேதவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய திட்டத்திற்கு அண்மைய கால அச்சுறுத்தல் பிக்பாஸ்தான். நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், உயிரே போவதாக இருந்தாலும் கூட அதை பற்றியெல்லாம் கவலையே படாமல் சினிமாவைப் பற்றி பேசுவதுதான் தமிழர்களின் வழக்கம். குறிப்பாக, நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் வாழ்வாதாரமே பறிபோன பின்னும் கூட சினிமா அலசல்தான் பிரதானமாக உள்ளது.

பிக் பாஸுக்கு கிடைத்த வரவேற்பில் இப்போது அஜித், விஜய் படங்கள் கூட பின்னுக்குப் போய்விட்டன. அடுத்த மாதம் வெளிவரவிருக்கிறது அஜித்தின்விவேகம்’.  குறிப்பாக, விஜய்யின்மெர்சல்வருவதற்குள் பிக்பாஸ் தொடர் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள் முன்னணி நடிகர்கள்

ஆனால் 'விவேகம்'தான் பிக்பாஸால் அதிகம் பாதிக்கப்படும் போல தெரிகிறது. ஆகஸ்ட் 24-ஆம் தேதி விவேகம் வெளியாகும் போது பிக் பாஸுக்கு 60ஆவது நாள். அதற்குப் பிறகும் 40 நாட்கள் பிக் பாஸ் ஓடவிருக்கிறது.  

 

இதனால் அந்த டிவி சேனல் மீது எரிச்சலாக இருக்கின்றார்கள் முன்னடி நடிகர்கள். ஆனால், வெளியிலும் காட்டிக் கொள்ள முடியாத சூழலில் தவிக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS