மரண அடி வாங்கிய பிக் பாஸ்; மீண்டும் ஓவியா பிரவேசம்?

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஆக.10- 'வைல்டு கார்டு' தேர்வு மூலம் ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் இரண்டு. ஒன்று ஓவியா மற்றொன்று ஜூலி. ஓவியா மீதான பாசம், ஜூலி மீதான வெறுப்பில் நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்தனர்.

 

ஜூலியைத் திட்டித் தீர்த்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலர் நிகழ்ச்சியைப் பார்த்தனர். இந்நிலையில் ஓவியா, ஜூலி வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

 

ஓவியாவை ஏன் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. ஓவியாவை வெளியேற்றியதால் ஓவியா 'ஆர்மி'க்காரர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளனர்.

மேலும் யாருக்கும் ஓட்டும் போடும் இல்லை. ஓட்டு ஓவியா இருந்தபோது லட்சக் கணக்கில் ஓட்டுகள் விழுந்தன. தற்போது சொற்ப ஓட்டுகளே விழுகின்றன.

 

இதைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஆடிப் போயுள்ளார்களாம். வைல்டு கார்டு ஓவியாவை மறுபடியும் அழைத்து வந்தால் தான் நிகழ்ச்சியை ஓட்ட முடியும் என்று நினைக்கிறாராம் பிக் பாஸ். இதனால் 'வைல்டு கார்டு' மூலம் ஓவியாவை அழைத்துவர திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் கசிந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS