நான் ஏன் உடல் எடை குறைத்தேன், தெரியுமா? இசையமைப்பாளர் இமான்

இந்தியச் சினிமா
Typography

சென்னை, செப்.1- தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இசையமைப்பாளர் இமான். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கும் இவரது இசையில் பல படங்கள் வெளிவர காத்திருக்கிறது. 

இசையமைப்பாளர் இமான் என்றால் குண்டாக, ஜப்பியாக இருப்பார். பலரும் இவருடைய கன்னத்தை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால், சிறிது காலமாக இவர் உடல் எடையை குறைத்து வருகிறார். சிலர், இமான் படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார்கள். ஆனால், உண்மையான விளக்கத்தை இமான் இன்று கூறியுள்ளார்.

நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடல் எடையை குறைத்து வருகிறேன். படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை என்றி இமான் இதற்கு பதிலளித்துள்ளார்.

தற்போது இவரது இசையில் ‘கருப்பன்’ படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும், தன்யா நாயகியாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்துள்ளார்கள். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இமான் உடல் எடை குறைப்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS