பிஸியாகும் ஓவியா; சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்கிறார்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, செப்.15- பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ஓவியா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் அருளுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓவியாவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்து விட்டனர்.

அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் டுவிட்டரில் ஓவியா ஆர்மி ஓவியா பிக் பாஸ் வீட்டிற்குத் திரும்பி வர மாட்டாரா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து, ஓவியாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைப் பெற்ற ஓவியாவை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் அவரது கடை தொடர்பான விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே, ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து அருள் நடித்த விளம்பரம் மிகவும் பிரபலமானது. ஆக, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா வந்தால் கடைக்கு நிச்சயம் பெரிய விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளம்பரத்தை ஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS