பிக்பாஸ்: நான்காம் இடம் பிடித்த கணேஷின் 'நிஷா தான் காரணம்' டிவிட்..!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, அக்.3- தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருந்து இறுதிச்சுற்று வரை சென்று வெற்றியை தவறவிட்டவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். 

பிக்பாஸ் வீட்டுக்குள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை சொல்லாமல் உண்மையாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆதரவு குவிந்தது. ஆனாலும், இவரால் பிக்பாஸ் இறுதிப்போட்டியில் நான்காமிடமே பிடிக்க முடிந்தது.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் தற்போது மனைவியுடன் ஒன்றாக ஹோட்டலுக்குச் சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 'தியாகம் தான் உண்மையான காதலின் தேர்வு. என்னைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்ததற்கு நன்றி பேபி... நீதான் எனது ஊக்கம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கணேஷை அவரது மனைவி நிஷா பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே ஒருமுறை சந்தித்துப் பேசினார். பிக்பாஸ் ஃபைனல் நடந்தபோது நான்காம் இடம் பெற்ற கணேஷை நிஷாதான் விட்டுக்குள் சென்று அழைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS