'ஓவியாவுடன் இணைவேன்'; சொல்கிறார் ஆரவ்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, அக்.3 - பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவ்வை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு ஆரவ் எதிரியானார். 

ஆனால், 100 நாள் அன்று ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். ஆனாலும் பலர் அவரைத் திட்டி தீர்த்ததோடு, கடுமையாக விமர்சித்தும் வந்தனர். பெண்ணின் மனதைக் காயப்படுத்தியவர்கள் எப்படி வெற்றியாளர் ஆக முடியும் என்றும் கேட்டனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் நேரடியாக சாட் செய்த ஆரவ்விடம் பலர் வாழ்த்து சொல்லியும் கேள்விகள் கேட்டும் உரையாடினர். ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பீர்களா என்று ஆரவ்விடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கூறியதாவது, ரசிகர்களின் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் ஓவியாவுடன் இணைந்து நடிப்பேன் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான ஆரவ்வை ஹீரோவாக பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஓவியா, ஆரவ் ஜோடியாக நடிக்கும் படம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS