தீபாவளிக்கு வரும்.., ஆனா வராது? 'மெர்சல்' படம் மீண்டும் இழுபறி!

இந்தியச் சினிமா
Typography

 

சென்னை, அக்.10- வழக்கு, இடைக்காலத் தடை என  அனைத்து தடங்கல்களில் இருந்தும் தப்பித்த இளைய தளபதி விஜயின் 'மெர்சல்' படம் இன்னொரு சோதனையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

இந்தப் படம் தணிக்கை செய்யப்பட்டு, தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதுப் படங்களை வெளியிடுவதில்லை என்ற தயாரிப்பாளர் சங்கத்தினர் எடுத்த முடிவினால் படம் தீபாவளிக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளூர் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அந்த முடிவால் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதுவும் ரிலீசாகாமல் உள்ளன. இந்த நிலையில் விஜய்க்காக இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? அல்லது தொடருமா? என்பதைக் காண திரையுலகம் காத்திருக்கிறது. 

ரூ 145 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள மெர்சல் தீபாவளிக்கு வெளியாகாவிட்டால் பெரிய இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க வேண்டி வரும் எனக் கூறப்படுகிறது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS