கவர்ச்சி உடைகளில் கலக்குகிறார் ஐஸ்வர்யா ராய்! ஏனிந்த மாற்றம்?

இந்தியச் சினிமா
Typography

மும்பை, டிசம்.14- திரையுலகிற்குள் மீண்டும் பிரவேசம் செய்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் முன்பைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதலான நேர்த்தி மிகு கவர்ச்சி உடைகளில் வலம் வரத்தொடங்கி இருக்கிறார்.

உலக அழகியாக தேர்ந்தடுக்கப்பட்ட பின்னர் 1997ஆம் ஆண்டில் முதன் முறையாக தமிழ்ப் படத்தில் தான் ஐஸ்வர்யா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்த பின்னர் போலிவுட் திரைகளில் அபார வெற்றிகளைக் குவித்து உலக அரங்கில் மிகப் பிரலமான நடிகையாக புகழ் பெற்றார். 

பின்னர். மற்றொரு பிரபல போலிவுட் திரைக் குடும்பமான அமிர்தாப் பச்சானின் மகனான அபிஷேக் பச்சானை மணந்த பின்னர் அவர் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில், 44 வயதை எட்டிவிட்ட நடிகை ஐஸ்வர்யா மீண்டும் திரையுலகிற்குள் நுழைந்து சில முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்பை விட அதிகமான, தேர்வு செய்த சில பொது நிகழ்ச்சிகளில் அவர் தவறாமல் கலந்து கொள்கிறார்.

அப்படி கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் போது தனது உடைகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார் அவர் அணியும் விதமான விதமான உடைகள், மாடல் உலகின் கவனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் அணிந்திருந்த கவர்ச்சியான உடை பல தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

இந்த உடையின் மதிப்பு கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் என்ற தகவலுடன் 'டக்சிடோ' என்ற இந்த உடையைத் தயாரித்தவர் பிரபல ஆடை வடிவமைப்பாளரான அலெக்சில் மாபிலே என்பவராவார். ஐஸ்வர்யாவின் இந்தக் கவர்ச்சி உடையணிந்த படங்கள், சமூக ஊடகங்களில் பரபரப்பான பரவி வெகுவான வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS