ஐதராபாத், டிசம்.14- தெலுங்குப் படவுலகில் நன்கு அறிமுகமான காமெடி நடிகரான விஜய் சாய் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 35 வயதுடைய விஜய் சாய், ஐதராபாத்தில் யூசுப்குடா பகுதியில் அமைந்துள்ள அவரது அடுக்கு மாடிக் குடியிருப்பில் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
மரணம் அடைவதற்கு முன்பு அவர் பதிவு செய்து வைத்திருந்ததாக நம்பப்படும் வீடியோ காட்சி ஒன்றை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். குடும்ப வாழ்க்கையில் அவர் கடும் பிரச்னைகளை எதிர்நோக்கி வந்தார். அவர் மனைவியை விட்டு அவர் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
மேலும் விஜய் சாய்க்கு எதிராக அவருடைய மனைவி அண்மையில் போலீசில் புகார் செய்திருந்தது தொடர்பில் அவர் மிகுந்த வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டில் திரையலகப் பிரவேசம் செய்த விஜய் சாய், 'பொம்மரிலு' என்ற படம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவு, தெலுங்கு திரையுலகில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தூக்கு மாட்டி இறந்த 'காமெடி' நடிகர் விஜய் சாய்! திரையுலகம் அதிர்ச்சி!
Typography
- Font Size
- Default
- Reading Mode