கொழுப்பைக் குறைக்க அறுவைச் சிகிச்சை: லெட்சுமிமேனன் மெலிந்து அழகியான மர்மம்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, டிசம்.14- அண்மைய ஓராண்டு காலமாக பட வாய்ப்புகள் குறைந்ததால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நடிகை லெட்சுமி மேனன், கொழுப்பை நீக்கும் அறுவைச் சிகிச்சைகள் செய்து கொண்டதன் வழி உடல் மெலிந்து பட வாய்ப்புக்கு மீண்டும் தயாராகி இருக்கிறார்.

திடீரென எப்படி லெட்சுமி மேனன் உடல் மெலிந்து மீன்டும் அழகான வடிவத்தைப் பெற்றார்? என்ற கேள்வி திரையுலகில் பரவலாகிக் கொண்டிருந்த தருணத்தில், கொழுப்பைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டிருப்பாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் பருவத்திலேயே திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய லெட்சுமி மேனன், வயதுக்கு மிஞ்சிய உடல் வளர்ச்சி காரணமாக நாயகியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 

தமிழில் 'கும்கி' படம் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து சில முன்னணி நாயக நடிகர்களுடன் நடித்தார். அஜித்துடன் 'வேதாளம்' படத்தில் தங்கையாக நடித்த பின்னர் அவருடைய கதாநாயகி அந்தஸ்து மங்கத் தொடங்கி விட்டது.

இதனால், பட வாய்ப்புகள் குறைந்து வீட்டிலேயே இருக்க நேர்ந்ததால் உடல் குண்டாகி சங்கடத்துடன் இருந்து வந்த லெட்சுமி மேனனின்  தற்போதை புதிய, மெலிந்த தோற்றம் ரசிகர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையோடு புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார் லெட்சுமி மேனன்.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS