ஐந்து நிமிட ஆட்டம்: ரூ. 5 கோடியா பிரியாங்காவுக்கு?  'கிறுகிறு'ன்னு  வருதே!

இந்தியச் சினிமா
Typography

 மும்பை, டிசம்.18- திரைப்பட விருது விழா ஒன்றில் ஐந்து நிமிடம் நடனமாடுவதற்கு பிரபல போலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

2017ஆம் ஆண்டு தனது இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் பல போலிவுட் பிரபலங்கள் ஆண்டு இறுதி விருந்து நிகழ்ச்சிகளுக்குத் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், அடுத்த சில தினங்களில் நடக்கவிருக்கும் ஜீ சினி விருது விழா-2018 -இல் ஒட்டுமொத்த போலிவுட் திரையுலகம் கலந்து கொள்ளவிருக்கிறது. நட்சத்திரங்களின் விதவிதமான நடனங்கள் இதில் இடம்பெறவுள்ளன.

போலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகைகள் கரீனா கய்ப், ஜேக்குலின், பூமி பட்னேகர் உள்ளிட்டோர் இந்த விருது விழாவில் நடனமாடவுள்ளனர்.

நடன நிகழ்ச்சிகளில் இறுதி நிகழ்ச்சியாக பிரியாங்கா சோப்ராவின் நடனம் இடம்பெறவுள்ளது. ஐந்து நிமிடம் இவர் ஆடப்போகும் நடனத்திற்கு கட்டணமாக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளீயாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மைய காலமாக ஹோலிவுட் திரைப்படங்களிலும் தொலக்காட்சி தொடர்களிலும் ஆர்வம் காட்டி வரும் பிரியாங்கா சோப்ரா தனது போலிவுட் சம்பளத்தை இமாலய அளவுக்கு அதிகரித்திருப்பதாக திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS