நான் பாகுபலி பிரபாஸைக் காதலிக்கவில்லை! அனுஷ்கா அதிரடி!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜன.18- ’பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய இரு படங்களிலும் நடிகர் பிரபாஸ் உடன் அனுஷ்கா ஜோடியாக நடித்தார். தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் ‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், தெலுங்கு பட உலகில் தகவல் பரவிய வண்ணம் உள்ளன.   

ஆனால், அத்தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அனுஷ்காவை தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் அண்மையில் பிரபாஸ் தெரிவித்தார். 

இந்நிலையில், அனுஷ்கா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘பாகமதி’ படத்தின் விளம்பரத்திற்கு சென்னை வந்த அனுஷ்காவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.   

"எனக்கும், பிரபாஸுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பேசப்படுவதில், உண்மை இல்லை. பிரபாஸ், எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான். எங்கள் இருவருக்கும் மத்தியில் வேறு எந்த உறவும் இல்லை" என்று அவர் சொன்னார்.   

"எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. முதலில், நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்கு பிடித்தால், உடனே திருமணம் செய்துக் கொள்வேன். நண்பர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் என் திருமணத்திற்கு நான் அழைப்பேன்" என்று அனுஷ்கா தெளிவுப் படுத்தினார். 

இதனிடையில், பாகுபலி படத்துக்கும், பாகமதி படத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் அனுஷ்கா சொன்னார். பாகமதி ஒரு திகில் படம். இதில், ‘சஞ்சனா’ என்ற ‘ஐ.ஏ.எஸ்.’ அதிகாரியாக தாம் நடித்து இருப்பதாக அவர் கூறினார். பாகமதியும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான் என்றும் அவர் தெரிவித்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS