நடிகை பாவனா திருமணம்! படத் தயாரிப்பாளரை மணந்தார்!

இந்தியச் சினிமா
Typography

திருச்சூர், ஜன.22- தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவரான நடிகை பாவனா, கன்னடத் திரைப்படத்  தயாரிப்பாளரான நவீனை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்தத் திருமணம் இன்று திருச்சூரில் நடந்தது.

தமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தில் அறிமுகமான பாவனா, பின்னர் 'ஜெயம் கொண்டான்', 'தீபாவளி', 'கூடல்நகர்', 'வெயில்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டில் கன்னடப் படமான ரோமியோவில் நடித்த போது அவருக்கும் படத் தயாரிப்பாளர் நவீனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. 

முதலில் இதனை மறுத்து வந்த இவர்கள் இருவரும் பின்னர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தேறியது. இந்நிலையில், பாவனாவின் தந்தை காலமாகிவிட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று திருச்சூரிலுள்ள பாவனாவின் வீட்டில் இவர்களின் சடங்கு வைபவங்கள் நடந்தன. பின்னர் இன்று காலை 9.30 மணிக்கு திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஆலயத்தில் திருமணம் நடந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS