ஓவியாவும் சிம்புவும் இணையும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

இந்தியச் சினிமா
Typography

சென்னை, பிப்.15- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா 'வேற மாதிரி' மாறி பல மாதங்கள் ஆகிவிட்டன. கைவசம் நிறைய படங்கள் இருக்க, அடுத்ததாக சிம்புவுடன் ஓவியா இணைந்துள்ளார்.

தற்போது ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 படத்தில் நடித்து வரும் ஓவியா, சீனி, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஓவியா விட்டா யாரு, களவாணி 2 ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். 

இந்நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள படம் '90 மில்லி'. படத்தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இதனை உறுதி செய்ய காதலர் தினமான நேற்று முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. 

முதல் பார்வை போஸ்டரில் ஓவியா தேநீர் கடை ஒன்றில் ஒய்யாரமாக உட்கார்ந்து தேநீரும் ரொட்டியும் சாப்பிடுவது போலவும் அருகே ஒருவர் தேநீர் கலக்குவது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தை 'குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் தயாரித்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

படத்தின் பெயர் 90 மில்லி என்றும் இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில் சிம்பு இசையமைத்த பாடலில் ஓவியா பாடியது நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் என்பதால் நயன்தாரா போல ஓவியாவும் பெரிய அளவில் பேசப்படுவார் என ஓவியா ஆர்மியினர் முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS