ரஜினியின் அடுத்த படம்; 'ஜிகர்தண்டா' கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்! சன் பிக்சஸ் தயாரிப்பு!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, பிப்.23- தீவிர அரசியலில் ஈடுப்பட்டுள்ள ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவிருப்பது கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தை சன் பிக்சஸ் தயாரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் எந்திரன் 2 மற்றும் காலா ஆகிய படங்கள் இன்னும் வெளிவராத நிலையில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பீட்சா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா மூலம் பிரபலமான கார்த்திக் சுப்புராஜ் ரஜினி படத்தினை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

தற்போது சன் பிக்சஸ் நிறுவனம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரித்து வருகிறது. அந்த படத்திற்கு பிறகு ரஜினியின் படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. 

ரஜினி தீவிர அரசியலில் ஈடுப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய படத்தின் அறிவிப்பு அரசியல் உலகத்தை மட்டுமல்ல திரையுலகத்தையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS