மறைந்த 'மயிலு' ஶ்ரீதேவி துபாய் நிகழ்ச்சியில் சந்தோசமாக ஆடும் காணொளி! (VIDEO)

இந்தியச் சினிமா
Typography

மும்பை, பிப்.26- திரையுலக ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நடிகை ஶ்ரீதேவி, துபாயில் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியின்போது இந்தி பாடலுக்கு சந்தோசமாக ஆடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் துபாயில் தன் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த 54 வயதான ஶ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின் மரணச் செய்தி தமிழ், இந்தி என அனைத்து மொழி திரையுலகத்தையும் கலங்க வைத்தது.

   ### காணொளி: நன்றி STV News 24/7

இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஶ்ரீதேவி அங்கு நடந்த ஆடல் பாடல் நேரத்தின்போது சந்தோசமாக மற்ற பெண்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் பச்சை நிற உடை அணிந்த ஶ்ரீதேவி இந்தி பாடலுக்கு குதூகலமாக ஆடுகிறார். இதனை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த அவரின் ரசிகர்கள் தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS