'கருப்பு..., உழைப்போட வண்ணம்'; ரஜினியின் 'காலா' டீசர் அமர்க்களம்! (VIDEO)

இந்தியச் சினிமா
Typography

சென்னை, மார்ச் 2- நடிகர் ரஜினி மற்றும் பா.ரஞ்சித் கூட்டணியில் எதிர்பார்க்கப்பட்ட படமான காலா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் இப்போது பிரபலமாகி வருகிறது.

தனுஷ் தயாரிப்பில் அடுத்த மாதம் 27ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் காலா. கபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித், ரஜினி, சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் தயாராகியுள்ள இப்படம் முதல் பார்வை போஸ்டர் வெளியானபோதே சர்ச்சையையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியது. 

   ###காணொளி: நன்றி Wunderbar Studios

இந்நிலையில், படத்தின் டீசரை தனுஷின் வண்டார்பார் நிறுவனம் நேற்று இரவு 12 மணிக்கு வெளியிட்டது. இரவில் வெளியிட்டாலும் வெளியான 7 மணிநேரத்தில் இந்த டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

படத்தில் கருப்பு வெள்ளை பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ள நிலையில் கருப்பு நிறம் குறித்து ரஜினி பேசும் 'கருப்பு உழைப்போட வண்ணம்' போன்ற வசனங்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS