நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாய்.. அமெரிக்காவில்..!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, மார்ச் 6- என்ன தான் நாங்கள் காதலிக்கிறோம் என்று ரசிகர்களிடம் நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும் ஜோடிகள் சேர்ந்து வெளியிடும் படங்கள் அதனைக் காட்டி கொடுத்து விடுகின்றன. வேற யாருங்க.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தான்.

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னமே செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதனை இருவரும் மறுக்கவும் இல்லை, அதே நேரத்தில் ஒப்புக் கொள்ளவும் இல்லை.

பல மேடை நிகழ்ச்சிகளில் கூட அறிவிப்பாளர்கள் நேரிடையாக இதைப் பற்றி கேட்க, நயன்தாராவோ சிரித்துக் கொண்டே பேசாமல் இருந்து விடுவார். 

இந்நிலையில், சூரியா நடிப்பில் தான் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் விக்னேஷ் சிவன் பிஸியாக இருந்ததால் நயன்தாராவுடன் நேரம் செலவிட முடியாமல் போனது. படம் வெளிவரும் வரையில் காத்திருந்த இருவரும், படம் வெளியாகி 50 நாளைத் தொடுவதற்கு முன்னதாகவே அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தனது டிவிட்டரில் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இருக்கும் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS