சினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை!

இந்தியச் சினிமா
Typography

ஹைதராபாத், ஏப்ரல்.6- பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி சொந்த ஊரில் ஆடு மேய்ப்பது போன்ற புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

தமிழ் சினிமாத்துறையில் தற்போது நிறுத்தம் நடந்து வருவதால் திரைப்படபிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக நடிகர் விக்ரம் தனது குடும்பத்துடன் கேரளாவுக்கும், நடிகை நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பின் கொச்சினில் உள்ள  தனது சொந்த வீட்டிற்கு சென்றிருந்தார்.

 நகைச்சுவை நடிகர் கருணாகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வேலைநிறுத்தத்தினால் வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகி விடும் போல இருக்கு எனவும் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை பிந்து மாதவி தனது சொந்த ஊரான ஆந்திர பிரதேசத்திலுள்ள தேவரிந்து ச் சென்றுள்ளார்.  அங்கு சென்ற அவர்,  தான்ஆடு மேய்க்கும் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மண்பானையில் சமைப்பது, கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் குலதெய்வ கோவில்களுக்கு நடந்து சென்று பிராத்தனை செய்வது போன்ற புகைப்படங்களை பதியேற்றம் செய்துள்ளார். நகரத்திலிருந்து கிராமத்தில் இருப்பது கூட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS