'ஜோக்கர்' படத்திற்கு தேசிய விருது; சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து!

இந்தியச் சினிமா
Typography

புதுடெல்லி, ஏப்ரல் 7- கடந்தாண்டு வெளிவந்து ரசிகர்களிடம் பெறும் பாராட்டைப் பெற்ற ஜோக்கர் திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதேபோல சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது தர்மதுரை படத்தின் பாடலுக்காக கவிபேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு படங்கள் தேசிய விருதினைத் தட்டி சென்றன. இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் என்பவர் நடிப்பில் வெளிவந்த படம் ஜோக்கர்.

படம் வெளிவந்த பிறகு அனைத்து ரசிகர்களாலும் பாரட்டப்பட்ட இப்படத்திற்கு சிறந்த தமிழ்ப்படமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படமான தர்மதுரை படத்தில் கவிபேரரசு வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்காக அவருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை இந்தி நடிகர் அக்ஷய் குமார் பெற்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS