கமல்ஹாசன் வீட்டில் தீ; ஊழியர்கள் காப்பற்றியதால் உயிர் தப்பினார்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல் 8- ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் இன்று காலையில் திடீரென தீ பிடித்தது. அவரின் ஊழியர்கள் உடனடியாக அவரைக் காப்பாற்றியதால் கமல்ஹாசன் உயிர் பிழைத்தார்.

சென்னையிலுள்ள ஆழ்வார் பேட்டையில் நடிகர் கமல்ஹாசனின் வீடு உள்ளது. மூன்று மாடி வீடான அதில் மூன்றாவது மாடியில் கமல் தங்கிருக்கிறார். இந்நிலையில் இன்று நள்ளிரவில் அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. 

மூன்றாவது மாடியில் இருந்த குளிர்சாதன பெட்டி அதிக வெப்பம் அடைந்தததால் அது வெடித்ததாக கூறப்படுகிறது. தீ விபத்தில் அருகில் இருந்த புத்தகங்கள் இருந்த அலமாரியும் சேதமடைந்தது. அதில் இருந்த புத்தகங்கள் தீயில் சாம்பலானதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த கமல், அதில் வீட்டில் தீ விபத்து நடந்ததாகவும் மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்கி தப்பித்ததாகவும் அவரின் ஊழியர்கள் உடனடியாக அவருக்கு உதவியதாகவும் கூறியுள்ளார். மேலும் ஊழியர்களுக்கு நன்றி, நான் பாதுகாப்பாக இருக்கிறேன். யாருக்கும் காயமில்லை. இரவு வணக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS