இயக்குனராகியது போதாது..! பாடல் எழுதவும் துவங்கிவிட்டார் பிரபுதேவா!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல் 11- நடிச்சாசி, ஆடியாச்சி, இயக்கியாச்சி.. அடுத்து? சரி பாடல் எழுதுவோம் என்று கிளம்பிவிட்டார் நடிகர் பிரபுதேவா. தான் நடிக்கும் புதிய படத்திற்கு தானே பாடலாசிரியராக மாறியுள்ளார் அவர். 

'வா முனியம்மா வா' பாடல் மூலம் தன்னை நடன கலைஞனாக அடையாளம் காட்டிக் கொண்ட பிரபுதேவா பின்னர் நடிகராகி பல படங்களில் நடிந்திருந்தார். சிறிது காலம் சினிமாவிலிருந்து எட்டி நின்ற பிரபுதேவா பின்னர் இந்தியில் இயக்குனராகி பெரும் ஹிட் கொடுக்கும் படங்களைக் கொடுத்தார். பின்னர் தேவி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த பிரபுதேவா இப்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார்.

அது எப்படிங்க என்கிறீர்களா? பிரபுதேவா நடித்து வரும் புதிய படம் எங் மங் சங். இப்படத்தை எம்.எஸ்.அர்ஜூன் எனும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தில் திருவிழா காட்சியில் பாடல் ஒன்று வருகிறதாம். அப்பாடலைப் பிரபல பாடலாசிரியரை வைத்து எழுத நினைத்தப்போது பிரபுதேவா, அப்பாடலில் என்ன விசயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என 'இன்புட்' கொடுத்தாராம். இயக்குனரல்லாவா தன் சார்பில் ஏதாவது சொல்லவேண்டும் என்று நினைத்தவருக்கு அடித்தது ஜாக்பாட்.

இயக்குனரோ, உங்கள் ஐடியா நல்லா இருக்கு சார். பேசாமே நீங்களே பாடலை எழுதிடுங்க என்று கூற, முதலில் தயங்கியவர் பின்னர் பாடலை எழுதி கொடுத்தாராம். 'அய்யனாரு வந்துட்டாரு இங்க பாரு' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். சங்கர் மகாதேவன் பாடிய இப்பாடலுக்கு ஶ்ரீதர் நடன அசைவுகளை வழங்க 150 பேர் ஆடுகிறார்களாம். 

வெகுவிரைவில் பிரபுதேவா சொந்தமாக இசையமைக்கவும் செய்வார் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS